மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி: உலகத் தலைவர்கள் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (ஜூன் 9) மாலை சரியாக 7.23 நடந்த பிரம்மாண்ட பதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். ‘நான் நரேந்திர தாமோதரதாஸ் மோடி, கடவுளின் பெயரால்..’ என்று ஆரம்பித்து மோடி பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. விழாவுக்கு திரண்டிருந்த ஆதரவாளர்கள் ‘பாரத் மாதா கி ஜி’ என்று பலத்த கோஷம் எழுப்பினர்.

மோடியுடன் 72 பேர்: மோடியைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா, சிவ்ராஜ் சிங் சவுகான், நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்சங்கர், மனோகர் லால் கட்டார், பியூஷ் கோயல், ஹெச்டி குமாரசாமி, தர்மேந்திர பிரதான், ஜித்தன் ராம் மாஞ்சி, ராஜீவ் ரஞ்சன் சிங், சர்பானந்தா சோனோவால், வீரேந்திர குமார், தெலுங்கு தேசம் எம்.பி., ராம்மோகன் நாயுடு, பிரஹலாத் ஜோஷி, கிரிராஜ் சிங், அஸ்வினி வைஷ்ணவ், ஜோதிராதித்ய சிந்தியா, பூபேந்திர யாதவ், கஜேந்திர சிங் ஷெகாவத், கிரண் ரிஜிஜு, ஹர்தீப் சிங் புரி, மன்சுக் மாண்டவியா, ஜி.கிஷன் ரெட்டி, சிராக் பஸ்வான், ராவ் இந்தர்ஜித் சிங், ஜிதேந்திர சிங், அர்ஜூன் ராம் மேக்வால், ஜெயந்த் பாட்டீல், சிவசேனா எம்.பி. பிரதாப் ராவ், ஜித்தின் பிரசாதா, ஸ்ரீபத் யெஸோ நாயக், பங்கஜ் சவுத்ரி, கிருஷண் பால், ராம்தாஸ் அதாவலே, நித்யானந்த் ராய், ராம்நாத் தாக்கூர், அப்னா தளம் எம்.பி. அனுபிரியா படேல், வி.சோமன்னா, தெலுங்கு தேசம் எம்.பி. சந்திரா எஸ். பெம்மசானி, எஸ்.பி.சிங் பாகெல், சோபா சிங் கரந்தலஜே, கீர்த்தி வர்தன் சிங், பி.எ.வெர்மா, சுரேஷ் கோபி, எல்.முருகன், அஜய் தம்தா, பண்டி சஞ்சய் குமார், கம்லேஷ் பஸ்வான், பாகிரத் சவுத்ரி, சதீஷ் சந்திர துபே, ஜூவல் ஓரம், அன்னபூர்ணா தேவி, சாந்தனு தாக்கூர், ரவ்னீத் சிங், சஞ்சய் சேத், துர்கா தாஸ் உய்கே, ரக்‌ஷா கட்சே, சுகந்தா மஜும்தர், சாவித்ரி தாக்கூர், தோக்கான் சாஹு, ராஜ் பூஷன் சவுத்ரி, பூபதி ராஜு ஸ்ரீநிவாச வர்மா, ஹர்ஷ் மல்ஹோத்ரா, ஜெயந்திபாய் பம்பனியா, முரளிதர் மோஹோல் ஆகியோர் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி உள்பட 72 பேர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டவர்கள் யாருக்கும் இலாகா ஒதுக்கப்படவில்லை. நாளை இலாகா ஒதுக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மீண்டும் அமைச்சரவையில்.. மோடி 3.0 மத்திய அமைச்சரவையில் அமித் ஷா, ராஜ்நாத் சிங், எஸ்.ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோர் மீண்டும் இடம் பிடித்துள்ளனர்.

முன்னதாக நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றது. எனினும், தனிப் பெரும்பான்மை (272) கிடைக்கவில்லை. அதேநேரம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 293 இடங்களில் வென்று ஆட்சியை 3- வது முறையாக தக்கவைத்துக் கொண்டது.

இந்நிலையில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு மோடி இன்று 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் நீல நிற ஓவர் கோட் கொண்ட உடை அணிந்து வந்திருந்தார்.

நேருவுக்குப் பின்.. நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்குப் பின்னர் தொடர்ந்து 3வது முறையாக நாட்டின் பிரதமராகும் ஒரே நபர் என்ற அந்தஸ்த்தைப் பெற்றுள்ளார் பிரதமர் மோடி. முன்னதாக, நேரு 1952, 1957, 1962 தேர்தல்களில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக மும்முறை பிரதமராக இருந்தார். இந்நிலையில் தற்போது மோடி 2014, 2019, 2024 என தொடர்ந்து மூன்று முறையாக பிரதமராகி இருக்கிறார் நரேந்திர மோடி.

உலகத் தலைவர்கள் பங்கேற்பு: மோடியின் பதவியேற்பு விழாவில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, நேபாள பிரதமர் புஷ்ப கமால் தாஹல் பிரச்சந்தா, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுகனாத், பூடான் பிரதமர் ஷெரிங் டாக்பே, வங்கதேச அதிபர் ஷேக் ஹசீனா, செஷல்ஸ் துணை அதிபர் அகமது ஆஃபீஃப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எதிர்க்கட்சிகள் தரப்பில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டார். நேற்றே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக்குப் பின்னர் கார்கே இன்று பிரதமர் மோடி பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்