பெங்களூரு: கர்நாடக அரசின் வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தின் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் (50) மே 26-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார்.
அவர் எழுதிய கடிதத்தில், “பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தின் பல்வேறு கணக்குகளில் இருந்த ரூ.187.3 கோடி மானியத்தை வெவ்வேறு கணக்குகளில் மாற்ற மூத்தஅதிகாரிகள் என்னை கட்டாயப்படுத்தினர். ரூ.88 கோடியை கொள்ளையடிக்க கட்டாயப்படுத்தியதால் தற்கொலை செய்துகொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த கடிதம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதால் பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தற்கொலைக்கு முன் சந்திரசேகரன் குறிப்பிட்டிருந்த, பழங்குடியினர் ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் பத்மநபா, தலைமை கணக்காளர் பரசுராம், யூனியன் வங்கியின் மேலாளர் சுஷ்சிதா ஆகிய 3 பேர் மீதும் பெங்களூரு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மூவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், போலீஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.
விசாரிக்க கூடாது: இந்நிலையில் கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா, “இந்த வழக்கில் கர்நாடக பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்நாகேந்திராவுக்கு தொடர்பு இருக்கிறது. அவரது உத்தரவின்பேரில்தான் இந்த முறைக்கேடு நடந்துள்ளது. கர்நாடக போலீஸார் இவ்வழக்கை விசாரிக்க கூடாது” என வலியுறுத்தினார்.
» பிரஜ்வல் தாயாருக்கு நிபந்தனை ஜாமீன்
» தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதால் விரலை வெட்டி காணிக்கை செலுத்திய இளைஞர்
இதையடுத்து அமைச்சர் நாகேந்திரா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பான கடிதத்தை முதல்வர் சித்தராமையாவிடம் அவர் வழங்கினார். இதைத் தொடர்ந்து கர்நாடக அரசு இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
இந்நிலையில் கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் அசோகா கூறுகையில், “இந்த வழக்கில் அமைச்சருக்கு மட்டும் தொடர்பு இல்லை. முதல்வர் சித்தராமையாவுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் நிதித்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவருக்கு தெரியாமல் நிதி வேறு கணக்குகளுக்கு மடைமாற்றி இருக்க வாய்ப்பு இல்லை. அவருக்கு தெரியாது என்றால், சித்தராமையா அலட்சியமாக இருந்தது தெரிகிறது. எனவே முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago