இன்று பிரதமராக பதவியேற்கிறார் மோடி: விழாவுக்கு 7 அண்டை நாடுகளின் தலைவர்கள் டெல்லி வருகை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லியில் இன்று நடைபெறும் மோடி பதவியேற்பு விழாவில் இந்தியாவின் 7 அண்டை நாட்டு தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

மக்களவை தேர்தலுக்குப் பின்னர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இன்று பொறுப்பேற்கிறது. மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமர் பதவியேற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க வங்கதேசம், நேபாளம், பூடான், இலங்கை, மாலத்தீவு, மொரீஷியஸ், சீசெல்ஸ் ஆகிய இந்தியாவின் அண்டை நாட்டு தலைவர்கள் டெல்லி வருகின்றனர்.

கடந்த 2014-ம் ஆண்டு மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பாகிஸ்தான் மற்றும் மியான்மர் ஆகிய இரு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இந்த முறை அந்த 2 நாட்டு தலைவர்களுக்கு இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு மோடி பிரதமர் பதவியேற்ற போது, பாகிஸ்தானில் அப்போது பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் பங்கேற்றார். அப்போது சார்க் நாட்டு தலைவர்கள் அனைவருக்கும் இந்தியா அழைப்பு விடுத்திருந்தது. அப்போது மியான்மர் நாட்டு தலைவரும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். ஆப்கானிஸ்தானைப் பொறுத்த வரை, தலிபான்களின் நிர்வாகத்தை இந்தியா இன்னும் அங்கீகரிக்கவில்லை. எனவே, அந்த கேள்வி இங்கு எழவில்லை. எல்லை தாண்டிய தீவிரவாத தாக்குதல் தொடர்ந்து வந்ததால், கடந்த 2019-ம் ஆண்டு பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மேலும், 3-வது முறையாக பிரதமர் பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு இதுவரை பாகிஸ்தானிடம் இருந்து வாழ்த்து செய்தி கூட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நரேந்திர மோடிக்கு இதுவரை பாகிஸ்தானிடம் இருந்து வாழ்த்து செய்தி கூட வரவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்