குஜராத் பனஸ்கந்தா தொகுதியில் பாஜக வேட்பாளர் ரேகாபென் சவுத்ரியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜெனிபென் தாக்குர் வெற்றி பெற்றார். வாவ் தொகுதியில் 2 முறை எம்எல்ஏவாக தேர்வான தாக்குர் இம்முறை 30,406 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி வாகை சூடியுள்ளார். இவரது வெற்றியால் குஜராத்தில் காங்கிரஸின் மக்களவை உறுப்பினர் கனவு 10 ஆண்டுகளுக்குப் பிறகு நனவாகியுள்ளது.
1975 ஜனவரி 1-ல் பிறந்த ஜெனிபென் தாக்குர். ஜெயின் விஸ்வபாரதி இன்ஸ்டிடியூட்டில் பி.ஏ. பட்டம் பெற்றவர். 2012-ல் வாவ் தொகுதியில் சட்டப்பேரவைக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 2017-ல் பாஜக மூத்த தலைவர் சங்கர் சவுத்ரியை 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று வலிமையான பெண்மணிஎன்ற பெயரைப் பெற்றார்.
2022-ல் தனது இடத்தை மீண்டும் தக்கவைத்துக் கொண்டார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எம்.பி. பதவியிலிருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ்மளியில் ஈடுபட்டதால் குஜராத் சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 16 எம்எல்ஏக்களில் இவரும் ஒருவர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago