2019-ம் ஆண்டு தேர்தலை விட திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு 2 சதவீத வாக்குகள் அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: திரிணமூல் காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் தனது வாக்கு சதவீதத்தை 2 சதவீதம் அதிகரித்துள்ளது தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரம் மூலம் தெரியவந்துள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளில், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸைவிட அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் எனவும், 30 இடங்கள் வரை பாஜக கைப்பற்றலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் கடந்த 2021-ல் நடந்த மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் கருத்து கணிப்புகள் தவறானது போல் இந்த முறையும் தவறாக அமைந்தது.

மக்களவை தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 29 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் பெற்ற இடங்களை விட கூடுதலாக 7 இடங்களை பெற்றுள்ளது. அதன் வாக்கு சதவீதமும் 43.7 சதவீதத்திலிருந்து 45.77 சதவீதமாக உயர்ந்துள்ளது. மொத்தம் 2.07 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் மேற்கு வங்கத்தில் பாஜக எம்.பி.க்களின் எண்ணிக்கை 18-லிருந்து தற்போது 12-ஆக குறைந்துள்ளது. பாஜக.,வின் வாக்கு சதவீதமும் 40.6 சதவீதத்திலிருந்து 38.73 சதவீதமாக குறைந்துள்ளது. 1.87 சதவீதம் குறைந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்