புதுடெல்லி: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் இந்தத் தேர்தலில் மத்திய அமைச்சர்கள், ஸ்டார் வேட்பாளர்கள் என்று அறியப்பட்ட ஸ்மிருதி இரானி, எல்.முருகன் உள்ளிட்ட பலரும் போட்டியிட்டு தோல்வியை தழுவியுள்ளனர்.
400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற அறைகூவலுடன் தேர்தலை சந்தித்தது பாஜக. ஆனால் பாஜகவுக்கு இந்த தேர்தல் முடிவு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பாஜக இந்த தேர்தலில் பல அமைச்சர்களை களம் இறக்கியது. இதில், ஸ்மிரிதி ராணி உள்பட பலர் தோல்வியடைந்துள்ளனர். பாஜகவின் நம்பிக்கை மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பாதி இடங்களில்கூட பாஜகவால் வெற்றி பெற முடியவில்லை. இது பா.ஜ.கவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த மத்திய அமைச்சர்கள் யார் யார் என்பதை இங்கே பார்க்கலாம்.
ஸ்மிருதி இரானி: உத்தரப் பிரதேசத்தில் காந்தி குடும்பத்துக்கு மிக நெருக்கமான தொகுதியாக கருதப்படுவது அமேதி. இத்தொகுதியில் கடந்த முறை ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜக மத்திய அமைச்சர்களில் ஸ்மிருதி இரானியும் ஒருவர். ஸ்மிருதி இரானி தொடர்ந்து ராகுல் காந்தியை விமர்சனம் செய்துவந்தார் ஆனால், இந்த முறை அமேதி தொகுதியில் ராகுல் காந்தி குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான கே.எல்.சர்மாவை காங்கிரஸ் களம் இறக்கியது. ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மாவிடம் 1,67,196 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
வி.முரளிதரன்: கேரளாவில் அட்டிங்கல் தொகுதியில் போட்டியிட்ட மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன், காங்கிரஸ் கட்சியின் சிட்டிங் எம்.பி. அடூர் பிரகாஷிடம் தோல்வியை சந்தித்துள்ளார். அதோடு மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.
» கூட்டணி ஆட்சி... - பாஜகவுக்கு சந்திரபாபு நாயுடு, நிதிஷின் நிபந்தனைகள் என்னென்ன?
» “கூட்டணி ஆட்சியை வழிநடத்துவதில் பாஜகவுக்கு நீண்ட அனுபவம் உள்ளது” - வானதி சீனிவாசன்
அஜய் மிஸ்ரா: மத்திய உள்துறை இணையமைச்சரான உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த அஜய் மிஸ்ராவின் மகன் லக்கிம்பூர் கெனியில் விவசாயிகளை டிராக்டர் ஏற்றிக் கொலைசெய்த சம்பவம் நாட்டை உலுக்கியது. அப்போதே அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அஜய் மிஸ்ராவுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. இந்நிலையில், அதே லகிம்புர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் உட்கர்ஷ் சர்மாவிடம் 34,329 வாக்குகள் வித்தியாசத்தில் அஜய் மிஸ்ரா தோல்வியடைந்தார்.
அர்ஜூன் முண்டா: ஜார்க்கண்டின் கண்டி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட மத்திய பழங்குடியின விவகாரங்கள் துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். காங்கிரஸ் வேட்பாளர் கலிசரன் முண்டாவிடம் 1,49,675 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
கைலாஷ் செளத்ரி: மத்திய வேளாண் துறை இணையமைச்சர் கைலாஷ் செளத்ரி ராஜஸ்தானின் பார்மர் தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் உம்மேதாவிடம் 4.48 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
ராஜீவ் சந்திர சேகர்: கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூரை எதிர்த்து போட்டியிட்டவர் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர். மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை இணையமைச்சராக பதவி வகித்த ராஜீவ் சந்திர சேகர், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து சில சுற்றுக்கள் முன்னிலை பெற்றார். ஆனால் அடுத்தடுத்த சுற்றுக்களில் பின்னடைவை சந்தித்தார். இறுதியில் 16,077 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்தார்.
மகேந்திர நாத் பாண்டே: மத்திய கனரக தொழில்துறை அமைச்சராக இருந்த மகேந்திர நாத் பாண்டே உத்தரப் பிரதேசத்தில் சண்டௌலி தொகுதியில் தோல்வியடைந்தார். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் கவுஷல் கிஷோர், மோகன்லால்கஞ்ச் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் ஆர்.கே.சவுத்ரியை எதிர்த்து 70,292 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
ராவ் சாகேப் தன்வே: மகாராஷ்டிராவில் உள்ள ஜல்னா தொகுதியில், ரயில்வே துறை இணை அமைச்சரான ராவ் சாகேப் தன்வே, காங்கிரஸின் கல்யாண் வைஜ்நாத் ராவ் காலேவிடம் தோல்வியடைந்தார்.
நிஷித் பிரமானிக்: மத்திய உள்துறை இணை அமைச்சர் நிஷித் பிரமானிக், மேற்கு வங்கத்தில் உள்ள கூச் பெஹார் தொகுதியில் திரிணமூல் கட்சி வேட்பாளர் ஜெகதீஷ் சந்திர பசுனியாவிடம் 39,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
எல்.முருகன்: தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நீலகிரி மக்களவை தொகுதியில் களமிறங்கினார். ஆனால் 2,40,585 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் ஆ. ராஜாவிடம் தோல்வியடைந்தார். நீலகிரி தொகுதிக்கு எல்.முருகன் அறிமுக வேட்பாளர் என்றாலும், சற்றி மக்களுக்கு பரிட்சயமான முகம் என்பதால் இவர் நீலகிரியில் வெற்றி பெறுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் புதுமுக வேட்பாளர்களையும், மத்திய அமைச்சர்களையுமே களமிறக்கியது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago