தேசிய அளவில் காங்கிரஸ் வாக்கு வங்கி உயர்வு; பாஜகவுக்கு சற்றே சரிவு!

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: 2019 தேர்தல் உடன் ஒப்பிடுகையில் 2024 மக்களவைத் தேர்தலில், தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. 2019-ல் 19.49% என்ற அளவில் இருந்த காங்கிரஸின் வாக்கு சதவீதம் இந்த தேர்தலில் 21.19% ஆக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 2% சதவீதம் காங்கிரஸின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது.

அதேநேரம், பாஜகவை பொறுத்தவரை ஒரு சதவீதம் சரிவை கண்டுள்ளது. தேர்தல் ஆணைய தரவுப்படி, பாஜக மொத்தமாக 36.56 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. அதுவே கடந்த 2019 தேர்தலில் பாஜக 37.34 சதவீத வாக்குகளை பெற்றது. கிட்டத்தட்ட ஒரு சதவீதம் பாஜகவின் வாக்குகள் குறைந்துள்ளது.

தொகுதிகள் எண்ணிக்கையிலும் காங்கிரஸ் இந்த முறை வெகுவாக முன்னேற்றத்தை கண்டுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் 52 இடங்களை மட்டுமே பெற்ற காங்கிரஸ் தற்போது 99 இடங்களை வென்றுள்ளது. அதேபோல், இண்டியா கூட்டணியின் வாக்கு சதவீதமானது 42% ஆக உள்ளது. அதே நேரத்தில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியானது 45 சதவீத வாக்குகளைப் பெற்றது.

உத்திரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் என்டிஏ-வுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது இண்டியா கூட்டணி. மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 17 இடங்களில் மட்டுமே வெல்ல, இண்டியா கூட்டணியோ 30 இடங்களை வென்றுள்ளது.

அதேபோல், உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 இடங்களில் சமாஜ்வாதிக்கு 37, காங்கிரஸுக்கு 6 தொகுதிகளில் வெற்றி கிடைத்துள்ளன. அதேநேரம் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை பாஜக 33 தொகுதியிலும், ராஷ்டிரிய லோக் தளம் 2, அப்னா தளம் ஒன்றிலும் வெற்றி பெற்றுள்ளன. இதேபோல் மேற்கு வங்கத்திலும் பாஜக சரிவை சந்தித்ததால் அக்கட்சியின் வாக்கு சதவீதம் சற்றே குறைந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

இந்தியா

29 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்