அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கத்தில் குழாய் குடிநீர் விநியோகம் ஒருநாள் நிறுத்தம்: குடிநீர் வாரியம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில் (CMRL) ஆற்காடுசாலையில் வடபழனி சந்திப்பு, பவர் ஹவுஸ், ரங்கராஜபுரம் மெயின்ரோடு சந்திப்பு ஆகிய இடங்களில்குடிநீர் பிரதான குழாய்கள் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று (ஜுன் 5) இரவு 9.00 மணிமுதல் 6-ம் தேதி இரவு 9.00 மணிவரை மண்டலம்–8, 9 மற்றும் 10-க்கு உட்பட்ட கீழ்க்கண்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

அதன்படி, மண்டலம்-8 (அண்ணாநகர்) அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ.காலனி, அமைந்தகரை, சூளைமேடு(பகுதி, மண்டலம்-9 (தேனாம்பேட்டை) சூளைமேடு (பகுதி), மகாலிங்கபுரம், நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு (பகுதி), தியாகராயநகர்(பகுதி), தேனாம்பேட்டை(பகுதி), மண்டலம்-10 (கோடம்பாக்கம்) கோயம்பேடு, விருகம்பாக்கம், சாலிகிராமம், அசோக் நகர், வடபழனி, மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், தியாகராய நகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளஅறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம்(Dial for Water) குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.

குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவானபகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள்மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும். குடிநீர் விநியோகம் எவ்வித தடையும் இன்றிமேற்கொள்ளப்படும். கூடுதல் தகவல்களுக்கு 044-45674567 எண்ணைதொடர்பு கொள்ளலாம் என்றுகுடிநீர் வாரியம் கூறியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்