மத்திய அரசை கண்டித்து பிறந்த நாளில் உண்ணாவிரதம்:சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

By என்.மகேஷ் குமார்

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து தனது பிறந்த நாளான வரும் 20-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள இருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

ஆந்திராவின் குண்டூர் மாவட்டம், தூளூரு பகுதியில் உள்ள ஷாக்கனூரில் 20 ஏக்கரில் ரூ. 100 கோடி செலவில் அம்பேத்கருக்கு மணி மண்டபம் கட்டப்பட உள்ளது. அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி அங்கு நேற்று நடைபெற்ற விழாவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்றார். அப்போது மணி மண்டபத்துக்கான வரைபடத்தை வெளியிட்டு அவர் பேசியதாவது:

முறையான திட்டம் வகுக்காமல் ஒருங்கிணைந்த ஆந்திராவை பிரித்த காரணத்தினால் தற்போது ஆந்திர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மத்திய அரசு தொடர்ந்து ஆந்திரா மீது அலட்சிய போக்கை காட்டி வருகிறது.

என்னுடைய போராட்டமெல்லாம் பிரதமர் மோடி மீதும் மத்திய அரசு மீதும்தான். இதில் எதிர்க்கட்சிகள் சுய லாபத்துக்காக அரசியல் செய்கின்றன. நம்பிக்கை துரோகத்தை கண்டித்தும் மாநில பிரிவினை மசோதாவில் அறிவித்த 19 அம்சங்களை அமல்படுத்த கோரியும் வரும் 20-ம் தேதி என்னுடைய பிறந்த நாளன்று மத்திய அரசை கண்டித்து உண்ணாவிரதம் நடத்த உள்ளேன்.

இம்முறை 25 மக்களவைத் தொகுதிகளிலும் தெலுங்கு தேசத்தை மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும். வரும் 30-ம்தேதி மத்திய அரசைக் கண்டித்து திருப்பதியில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்