உ.பி-யில் பாஜகவுக்கு ‘ஷாக்’ - சமாஜ்வாதி 35, காங். 6 இடங்களில் முன்னிலை @ தேர்தல் முடிவுகள் 2024

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணிக்கு (என்டிஏ) அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன் தலைமைக் கட்சியான பாஜக 33 தொகுதிகளில் முன்னலை வகிக்கிறது. சமாஜ்வாதி 35, காங்கிரஸ் 6 மற்றும் பிஎஸ்பி ஒரு தொகுதிகள் என முன்னிலை வகிக்கின்றன.

நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உ.பி.யில் 80 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆட்சி புரிகிறது. இச்சூழலில், மக்களவை தேர்தலின் முன்னணி பாஜக தலைமையிலான என்டிஏவிற்கு அதிர்ச்சி அளித்து வருகிறது. இம்மாநிலத்தில் என்டிஏவிற்கு 37, இண்டியா 41 தொகுதிகளில் முன்னணி வகிக்கின்றன.

உ.பி.யில் இண்டியாவின் முக்கிய கட்சியான சமாஜ்வாதி 35, காங்கிரஸ் 6 மற்றும் திரிணமூல் காங்கிரஸ் ஒரு தொகுதியில் முன்னணியாக உள்ளன. என்டிஏவில் பாஜக 34, அப்னா தளம் 1-ல் முன்னணி வகிக்கின்றன.

முக்கியத் தொகுதிகளில், என்டிஏவிற்காக வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி முன்னணி வகிக்கிறார். அப்னா தளம் தலைவர் அனுப்பிரியா பட்டேல் மிர்சாபூரில் முன்னணி வகிக்கின்றனர்.

மீரட்டில் பாஜக வேட்பாளரான அருண் கோவிலுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இங்கு பாஜகவிற்காக 2009, 2014, 2019-ல் எம்.பியாக இருந்த ராஜேந்தர் அகர்வாலுக்கு இந்தமுறை வாய்ப்பளிக்கப்படவில்லை. மீரட்டில் சமாஜ்வாதியின் சுனிதா வர்மா முன்னேறுகிறார்.

இண்டியாவில் முக்கிய தொகுதிகளில் காங்கிரஸ் ரேபரேலியில் ராகுல் காந்தியும், அமேதியில் கிஷோரி லால் சர்மாவும் முன்னணி வகிக்கின்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாஜகவின் வேட்பாளரான மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

சமாஜ்வாதியின் தலைவர் அகிலேஷ் சிங் யாதவ் கன்னோஜிலும், அவரது மனைவியாக டிம்பிள் சிங் யாதவ் மெயின்புரியிலும் முன்னணி வகிக்கின்றனர்.

சுல்தான்பூரின் பாஜக எம்பியான முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்திக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவரை எதிர்த்து சமாஜ்வாதிக்காகப் போட்டியிடும் ராம்புவால் நிஷாத் முன்னேறி வகிக்கிறார்.

மேலும், உ.பி.யின் பல முக்கிய தொகுதிகளில் என்டிஏ மற்றும் இண்டியா வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. மாலை வரை வெளியாகும் உ.பி.யின் 80 தொகுதிகளின் முடிவுகள் தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளை பொய்யாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்