கொச்சி: அண்டை மாநிலமான கேரளாவின் வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி வருகின்றன. மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியான யுடிஎஃப் கூட்டணி 17 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணி 2 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் நடிகர் சுரேஷ் கோபி முன்னிலையில் உள்ளார். சுரேஷ் கோபி 206378 வாக்குகளுடன் முன்னிலை உள்ளார். இவருக்கு அடுத்ததாக கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுனில்குமார் 168612 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் உள்ள வித்தியாசம் 37766 வாக்குகள்.
இதேபோல் திருவனந்தபுரம் தொகுதி தேர்தல் களத்தை இன்னும் சுவாரஸ்யமாக்கி வருகிறது. திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர் சசி தரூருக்கும், பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கும் இடையே தீவிர போட்டி நிலவி வருகிறது. தபால் வாக்குகள் எண்ணப்பட்ட போது இருவருக்கும் இடையே 8 வாக்குகள் தான் வித்தியாசம் இருந்தது. தொடர்ந்து சசி தரூர் 94714 வாக்குகளும், ராஜீவ் சந்திரசேகர் 103115 வாக்குகளும் பெற்றுள்ளனர். இருவருக்கும் இடையே உள்ள வித்தியாசம் 8401 வாக்குகள். தற்போதைய நிலையில் ராஜீவ் சந்திரசேகர் முன்னிலை வகிக்கிறார்.
வயநாட்டை பொறுத்தவரை ராகுல் காந்தி 245140 வாக்குகள் பெற்று சிபிஐ வேட்பாளர் ஆனி ராஜாவை விட 138618 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
» “மோடியின் வளர்ச்சி சார்ந்த கொள்கைகளை மக்கள் தேர்ந்தெடுப்பர்” - சுஷ்மாவின் மகள் பன்சூரி நம்பிக்கை
கேரளாவில் மொத்தம் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 26ம் தேதி தேர்தல் நடந்தது. 2024 மக்களவைத் தேர்தலில், இடது ஜனநாயக முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் 15 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் 4 தொகுதிகளிலும், கேரள காங்கிரஸ் (மாணி) ஒரு தொகுதியிலும் போட்டியிட்டது.
ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2 தொகுதிகளிலும், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும், கேரள காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜக 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாரத் தர்ம ஜன சேனா 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago