புவனேஸ்வர்: ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில் 9 மணி நிலவரப்படி பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
வாக்கு எண்ணிக்கை நிலவரம் எப்படி?: வாக்கு எண்ணிக்கையின் 9 மணி நிலவரப்படி பாஜக 17 சட்டப்பேரவை தொகுதிகளிலும், ஒரு மக்களவை தொகுதியிலும் முன்னிலை பெற்றுள்ளது. அதேநேரம் பிஜேடி 10 சட்டப்பேரவை தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 1 சட்டப்பேரவை தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது.
மக்களவைத் தேர்தலோடு ஒடிசாவில் 147 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நான்கு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. ஒடிசாவில் 63.46 சதவீத வாக்குகள் பதிவானது. பாஜக மற்றும் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது. 24 ஆண்டுகளாக ஒடிசாவில் ஆட்சியில் இருக்கும் பிஜேடியை அகற்ற வேண்டும் என்று பாஜக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டதால் ஒடிசா தேர்தல் களம் நாட்டில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
24 ஆண்டுகளாக ஒடிசா முதல்வராக இருந்த நவீன் பட்நாயக் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஆறாவது முறையாக ஆட்சியைப் பிடிப்பார். சிக்கிம் முன்னாள் முதல்வர் பவன் குமார் சாம்லிங்கின் சாதனையை முறியடித்து, இந்தியாவின் நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் என்ற பெருமையை அவர் பெறலாம்.
» ஆந்திர அரியணை யாருக்கு? - 9 மணி நிலவரப்படி தெலுங்கு தேசம் கூட்டணி முன்னிலை
» எதிர்க்கட்சி தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு @ உ.பி
முந்தைய 2019-ல் நடைபெற்ற ஒடிசா சட்டப் பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 147 இடங்களில் 112 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடன் நவீன் பட்நாயக்கின் பிஜேடி ஆட்சி அமைத்தது. பாஜக 23 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் வெற்றி பெற்றன.
தற்போதைய கருத்துக்கணிப்பின்படி, பாஜக அதிக தொகுதிகளை பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அக்கட்சிக்கு 62 முதல் 80 இடங்கள் வரை கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
அதேநேரம், பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சி 62 முதல் 80 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஒடிசாவில் அடுத்து யார் ஆட்சி என்பதில் பாஜக மற்றும் பிஜேடி இடையே கடுமையான போட்டி இருக்கும். அதேநேரம், காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் 5 முதல் 8 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்பது ஆக்சிஸ் மை இந்தியா கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. ஒடிசாவின் 21 மக்களவை தொகுதிகளிலும் பாஜக முன்னிலை பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago