பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் மக்களவைத் தொகுதி எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் ஆபாச வீடியோக்கள் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி வெளியாயின.
இதுதொடர்பாக அவர் மீது சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார்4 வழக்குகள் பதிவு செய்தனர். அவர் ஜெர்மனிக்கு தப்பியோடிய நிலையில் ஒரு மாதத்துக்கு பின்னர்கடந்த மாதம் 31-ம் தேதி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் அவரை கைது செய்தனர். வரும் 6-ம்தேதிவரை போலீஸார் பிரஜ்வலை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக, முன்னாள் அமைச்சரும் மஜத எம்எல்ஏவுமான ரேவண்ணாவை பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்ணை கடத்திய வழக்கில் போலீஸார் கைது செய்தனர். கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்த அவர், இவ்வழக்கில் இருந்து விடுதலை ஆக நாள்தோறும் ஒரு கோயிலுக்கு சென்று பூஜை செய்துவருகிறார்.
இந்நிலையில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் பாதிக்கப்பட்ட பெண்ணை கடத்தியது மற்றும் மிரட்டிய வழக்கில் பிரஜ்வலின் தாயார் பவானி ரேவண்ணாவின் பெயரையும் சேர்த்துள்ளனர். அவரை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு 2 முறை சம்மன் அனுப்பினர்.
ஆனால் அவர் ஒரு முறை கூடநேரில் ஆஜராகவில்லை. தன் வழக்கறிஞர் மூலமாக பதிலளிக்கவும் இல்லை. பவானியின் செல்போன் கடந்த மே 6-ம் தேதி முதல் அணைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் நேற்று பெங்களூரு, ஹாசன் ஆகிய இடங்களில் உள்ள அவரது வீடுகளில் சோதனை நடத்தினர். அங்கு அவர் இல்லாததால் மைசூரு, மண்டியா ஆகிய இடங்களில் உள்ள பவானியின் உறவினர்களின் வீடு, அலுவலகம் ஆகிய இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது குடும்பத்தினர் அவர் வெளிமாநில கோயிலுக்கு சென்றிருப்பதாக தெரிவித்தனர்.
இதனிடையே பவானி ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பிசென்றுவிட்டதாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால்போலீஸார் அவரது பாஸ்போர்ட்விவரங்களை சேகரித்து, தேடுதல்நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ‘‘பவானி ரேவண்ணாவை தேடும் பணிகள் வேகமாக நடந்துவருகின்றன. அவரை விரைவில் கைது செய்வோம்'' என்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago