புதுடெல்லி: ‘‘தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தவறு என நிருபணம் ஆகும். நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால், நான் மொட்டை அடிப்பேன்’’ என ஆம் ஆத்மி கட்சியின் புது டெல்லி வேட்பாளர் சோம்நாத் பாரதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் எல்லாம் தவறு என நிருபணமாகும். 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்ட பின்பு இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்கும். மோடி 3-வது முறையாக பிரதமராகமாட்டார். அப்படி அவர் பிரதமரானால், நான் மொட்டை அடிப்பேன்.
டெல்லியில் 7 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி வெற்றி பெறும். மக்கள் பாஜக.வுக்கு எதிராக அதிகளவில் வாக்களித்துள்ளனர். மோடி மீதான அச்சம் காரணமாக, கருத்து கணிப்பு முடிவில் தவறான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் நாம் 4-ம் தேதி வரை உண்மையான முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டும்.
இவ்வாறு சோம்நாத் பாரதி கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago