Exit Poll 2024 results: பாஜக கூட்டணி 350+, இண்டியா கூட்டணி 130+ வெல்ல வாய்ப்பு!

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழாவான 2024 மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், பாஜக கூட்டணி 350+ இடங்களிலும், இண்டியா கூட்டணி 130+ இடங்களிலும், இதரக் கட்சிகள் 40+ இடங்களிலும் வெற்றி பெற சாத்தியக் கூறு இருப்பதாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. பெரும்பான்மைக்கு 272 தொகுதிகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏபிபி - சிவோட்டர்ஸ் கருத்துக் கணிப்பு:
பாஜக கூட்டணி: 353-383
இண்டியா கூட்டணி: 152-182
மற்றவை: 4-12
ரிபப்ளிக் டிவி - Matrize கருத்துக் கணிப்பு:
பாஜக கூட்டணி: 353 - 368
இண்டியா கூட்டணி: 118 - 133
மற்றவை: 43 - 48
ஜன் கி பாத் கருத்துக் கணிப்பு:
பாஜக கூட்டணி: 362 - 392
இண்டியா கூட்டணி: 141 - 161
மற்றவை: 10 - 20
இந்தியா நியூஸ் - டி டைனமிக்ஸ் கருத்துக் கணிப்பு:
பாஜக கூட்டணி - 371
இண்டியா கூட்டணி - 125
மற்றவை - 47
நியூஸ் நேஷன் கருத்துக் கணிப்பு:
பாஜக கூட்டணி - 342-378
இண்டியா கூட்டணி - 153-169
மற்றவை - 21-23
டைனிக் பாஸ்கர் கருத்துக் கணிப்பு:
பாஜக கூட்டணி: 281 - 350
இண்டியா கூட்டணி: 145 - 201
மற்றவை: 33 - 49
இண்டியா டிவி - சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பு:
பாஜக கூட்டணி: 371-401
இண்டியா கூட்டணி: 109-139
மற்றவை: 28-38
என்டிடிவி-ஜான் கி பாத் கருத்துக் கணிப்பு:
பாஜக கூட்டணி: 365
இண்டியா கூட்டணி: 142
மற்றவை: 36

தமிழகத்தில் திமுக கூட்டணி 35+ இடங்களிலும், பாஜக கூட்டணி குறைந்தது 1 இடத்திலும், அதிமுக வாஷ் அவுட் கூட ஆகலாம் என்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதன் விவரம்:
சிஎன்என் - நியூஸ் 18:
திமுக கூட்டணி: 36 - 39
அதிமுக கூட்டணி: 0-2
பாஜக கூட்டணி 1-3
இண்டியா டுடே:
திமுக கூட்டணி 26 -30
அதிமுக கூட்டணி 0 -2
பாஜக கூட்டணி 1 - 3
ஜன் கி பாத்:
திமுக கூட்டணி 34 - 38
அதிமுக கூட்டணி - 1
பாஜக 5+
ஏபிபி சி வோட்டர்:
திமுக கூட்டணி 37 - 39
அதிமுக கூட்டணி - 0
பாஜக கூட்டணி - 2
இந்தியா டுடே - ஆக்சிஸ்:
திமுக கூட்டணி - 33+
பாஜக கூட்டணி 2 முதல் 4

7 கட்டங்களாக நடந்த தேர்தல்: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. கடந்தஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் 7 கட்டமாக 543 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இவற்றில் குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும்பாஜக வேட்பாளர் முகேஷ் தலால்போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

7 கட்ட தேர்தல்களில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படுகின்றன. எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பது அன்றைய மாலைக்குள் தெரிந்துவிடும். இந்நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. இவற்றில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

இந்தியா

35 mins ago

இந்தியா

18 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்