100-க்கும் அதிகமான பிரச்சார கூட்டங்களில் கார்கே, ராகுல் பிரியங்கா பங்கேற்பு

By செய்திப்பிரிவு

மக்களவை தேர்தலுக்காகக் கடந்த இரண்டு மாதங்களில், காங்கிரஸ் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் 100க்கும் அதிகமான பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று காங்கிரஸுக்கு வாக்கு சேகரிக்க முயன்றது தெரியவந்துள்ளது.

குறிப்பாக, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 100 பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார், 20 பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார் மற்றும் ஊடகங்களுக்கு 70 பேட்டிகள் அளித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 107 பேரணிகள், பிரச்சார கூட்டங்கள், வாகன பேரணிகள், கலந்துரையாடல்களில் பங்கேற்றுள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி 108 பொதுக்கூட்டங்களிலும் வாகன பேரணிகளிலும் பங்கேற்றுள்ளார். தொலைக்காட்சிகளுக்கு 100-க்கும் அதிகமான சிறிய அளவிலான பேட்டிகளை அளித்துள்ளார். அச்சு ஊடகங்களுக்கு மட்டும் 5 நேர்காணல்கள் அளித்துள்ளார்.

இதில் ரேபரேலியில் ராகுல் காந்திக்காகவும், அமேதியில் கிஷோரி லால் சர்மாவுக்காகவும் இரண்டு வாரங்கள் தொடர் பிரச்சாரத்தில் பிரியங்கா ஈடுபட்டார். ரேபரேலி மற்றும் அமேதியில் ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பங்கேற்ற இரண்டு மாநாடுகளில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE