புதுடெல்லி: வங்கதேசத்தினர், ரோஹிங்கியாக்களை இந்தியாவுக்கு கடத்தி வரும் கும்பலைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியை என்ஐஏ கைது செய்துள்ளது.
வங்கதேச மக்கள், ரோஹிங்கியாக்கள் ஆகியோர் வடகிழக்குமாநில எல்லைகள் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவுகின்றனர். இவர்களை இந்தியாவுக்கு அழைத்து வந்து, போலி ஆவணங்கள் ஏற்பாடு செய்து, நாட்டின் பலபகுதிகளில் வேலைக்கு அமர்த்தும் தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மனித கடத்தல் தொழிலை தடுக்கும் பணியில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) இறங்கியுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே 33 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 24 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ள முக்கிய நபர் ஜலில் மியா என்பவர் தலைமறைவாக இருந்து வந்தார். இவர் திரிபுரா மாநிலத்தை சேர்ந் தவர். இவரைப் பற்றி தகவல் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு என என்ஐஏ கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்திருந்தது.
» 57 தொகுதிகளில் பிரச்சாரம் இன்று ஓய்கிறது: ஜூன் 1-ல் இறுதிகட்ட தேர்தல்
» கேஜ்ரிவால் மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்: ஜூன் 2-ம் தேதி திஹார் சிறைக்கு திரும்புகிறார்
இந்நிலையில் இவரை என்ஐஏநேற்று முன்தினம் கைது செய்தது.இவரைப் பிடிக்க கடந்தாண்டு நவம்பர் மாதமே முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது 29 பேர் சிக்கினர். ஜலில் தப்பிவிட்டார். இந்த நபர்களுக்கு சொந்தமான இடங்களில், நடத்தப்பட்ட சோதனையில் டிஜிட்டல் சாதனங்கள், வங்கதேச டாகா மற்றும் அமெரிக்க டாலர், ஆதார் அட்டைகள், பான் அட்டைகள் ஆகியவைபறிமுதல் செய்யப்பட்டன.
இதன் அடிப்படையில் என்ஐஏ, மாநில போலீஸாருடன் இணைந்து பல இடங்களில் கடந்த திங்கள் கிழமை நடத்திய சோதனையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் வெளிநாட்டினர் நடத்தும் போலி கால் சென்டர்களில் பணியமர்த்தப்பட்டனர். கிரெடிட் கார்டுமோசடி, போலி விண்ணப்பங்கள் மூலம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு, ஹனி டிராப்பிங் போன்ற சட்டவிரோத செயல்களில்ஈடுபடவும் இவர்கள் வற்புறுத்தப்பட்டுள்ளனர். வங்க தேசத்தில் இருந்து இந்தியாவுக்கு ஆட்களை கடத்தும் தொழிலில் மிக பெரியநெட்வொர்க் இருப்பது தெரிய வந்துள்ளது.
ஆள்கடத்தலில் ஈடுபடும் திரிபுராவைச் சேர்ந்த ஜுஜ் மியா மற்றும் சான்டோ என்ற மற்ற இரு முக்கிய நபர்கள் இன்னும் தலைமறைவாக உள்ளனர். அவர் களை பிடிக்கும் முயற்சியில் என்ஐஏ இறங்கியுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago