இளைஞர்களை ராணுவத்தில் தற்காலிகமாக பணி நியமனம் செய்யும் வகையில் மத்திய அரசு 2022-ம் ஆண்டு அக்னிபாத் திட்டத்தைக் கொண்டுவந்தது. இதன்படி, தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு இந்திய ராணுவத்தில் நான்கு ஆண்டுகளுக்கு மட்டும் பணி வழங்கப்படும். இந்தத் திட்டத்துக்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தின் மூலம் நாட்டின் பாதுகாப்பில் மோடி அரசு விளையாடிக்கொண்டிருக்கிறது என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “இந்தத் திட்டம் தொடர்பாக எங்களிடம் மூன்று கேள்விகள் உள்ளன.
அக்னிபாத் திட்டத்தால் ராணுவத்தில் புதிய ஆட்சேர்ப்பு எண்ணிக்கை 75 ஆயிரத்திலிருந்து 46 ஆயிரமாக குறைந்துள்ளதா, இல்லையா? அக்னி வீரர் திட்டத்தை மறுபரிசீலனை செய்து மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரும்ப திரும்ப சொல்லிவருவது உண்மையா, இல்லையா? ராணுவத்தில் புதிய வீரர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்து ராணுவ விவகாரத் துறை கவலையோடு இருப்பது உண்மையா, இல்லையா? இந்திய எல்லைப் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்து வருகிறது.
இந்தச் சூழலை எதிர்கொள்ள ராணுவத்தில் அதிக வீரர்கள் தேவை. ஆனால், மோடி அரசு ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்தத் திட்டம் ரத்து செய்யப்்படும்” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago