மும்பை: மகாராஷ்டிர மாநில முன்னாள் மேயர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் காயமடைந்த அவர்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் மாநகராட்சி மேயராக இருந்தவர் அப்துல் மாலிக் முகமது யூனிஸ் இசா. இவர் அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி யைச் சேர்ந்தவர்.
இந்நிலையில் முன்னாள் மேயரான அப்துல் மாலிக் நேற்று நாசிக் மாவட்டத்துக்குச் சென்றிருந்தார். பகல் 1.20 மணியளவில் நாசிக்கின் பழைய ஆக்ரா சாலையிலுள்ள ஒரு கடையில் உட்கார்ந்திருந்தார்.
அப்போது அங்கு மோட்டார் பைக்கில் வந்த 2 மர்ம ஆசாமிகள், அப்துல் மாலிக்கை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோடினர். இதில்காயமடைந்த அவரை, அருகில்இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், உயிருக்கு ஆபத்தில்லை என்றும் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீஸார் அந்த மர்ம ஆசாமிகள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில் இந்த சம்ப வத்துக்கு ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கடும் கண்டனத்தைத் தெரிவித்து உள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago