நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள், மது உள்ளிட்டவற்றை கொடுப்பதைத் தடுக்க அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள 5 தொகுதிகளிலும் தேர்தல் முடிந்து விட்டது. அங்கு இதுவரை ரூ.95 கோடி மதிப்பிலான ரொக்கம், மது, போதைப்பொருளை பறிமுதல் செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறும்போது, “வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்களை விநியோகம் செய்வதைத் தடுக்க பல்வேறு அரசு அமைப்புகள் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டன.
இதில் காவல் துறையினர் அதிகபட்சமாக ரூ.90.83 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுபோல வருமான வரித் துறையினர் ரூ.42 லட்சம், கலால் வரி துறையினர் ரூ.1.01 கோடி மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் ரூ.2.32 கோடி மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
38 secs ago
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago