பிஹார் மாநிலம், பாட்னாவைச் சேர்ந்த கணக்காளர்கள் குடும்பத்தில் யஷ்வந்த் சின்ஹா பிறந்தார். அரசியல் அறிவியல் பாடத்தில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்த சின்ஹா, பாட்னா பல்கலையில் பேராசிரியராக சில ஆண்டுகள் பணியாற்றினார்.
24 ஆண்டுகள் ஐஏஎஸ்
அதன்பின் இந்திய ஆட்சிப்பணிக்கு கடந்த 1960-ம் ஆண்டு தேர்வாகி 24 ஆண்டுகள் பணியாற்றினார். இந்தக் காலத்தில் பிஹார் மாநிலத்தின் நிதி செயலாளராகவும், மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும் பணியாற்றினார். பல்வேறு நாடுகளின் துணைத் தூதராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் யஷ்வந்த் சின்ஹா. மத்திய அரசின் சாலை போக்குவரத்து துறை செயலாளராகப் பணியாற்றி 1984-ம் ஆண்டு ராஜினமா செய்தார்.
அரசியல் வாழ்க்கை
ஏறக்குறைய 24 ஆண்டுகள் இந்திய ஆட்சிப்பணியில் இருந்துவிட்டுக் கடந்த 1986-ம் ஆண்டு ஜனதா தளக் கட்சியில் சேர்ந்தார். முன்னாள் பிரதமர் சந்திரசேகர் ஆட்சிக்காலத்தில் 1990 முதல் 1991ம் ஆண்டு வரை நிதி அமைச்சராக யஷ்வந்த் சின்ஹா பொறுப்பு வகித்தார்.
மத்திய அமைச்சர்
அதன்பின் பாஜகவில் இணைந்த யஷ்வந்த் சின்ஹா தலைமை செய்தித்தொடர்பாளராகப் பணியாற்றினார். கடந்த 1998-ம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில் நிதி அமைச்சராகவும், வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
அதன்பின் 2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஹசாரிபார்க் தொகுதியில் நின்று போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன்பின் மீண்டும் மாநிலங்கள் அவை எம்.பி.யாக யஷ்வந்த் சின்ஹா, 2009ம் ஆண்டு தனது பாஜக துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
ஓரம்கட்டப்பட்டார்
அதன்பின் பாஜக கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட நிலையில் யஷ்வந்த் சின்ஹா கட்சியில் முக்கியத்துவம் இன்றியே இருந்தார். ஆனால், பிரதமர் மோடியால் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் பிரதமர் மோடியையும், அவரின் ஆட்சியையும் கடுமையாக விமர்சித்தார். பிரதமர் மோடிக்கு எதிராக பல்வேறு கூட்டங்களில் பேசி , பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்தார்.
அதுமட்டுமல்லாமல் மோடியின் ஆட்சியில் எம்.பி.க்கள் அனைவருக்கும் கருத்துரிமை பறிக்கப்பட்டுள்ளது, ஏதேச்சதிகாரத்துடன் மோடி செயல்படுகிறார் என்று சின்ஹா குற்றம்சாட்டி வந்தார். மேலும், மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் தங்கள் மனம்திறந்து பேச வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யஷ்வந்த் சின்ஹாவின் மகன் ஜெயந்த் சின்ஹா. இவர் தற்போது பிரதமர்மோடியின் அமைச்சரவையில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
மோடியைக் கடுமையாக விமர்சித்தவர்
பிரதமர் மோடி கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பாஜக கட்சியில் இருந்து கொண்டு கடுமையாக விமர்சித்ததில் முக்கியமானவர் யஷ்வந்த் சின்ஹா.
மோடியின் ஆட்சியை துக்ளக் ஆட்சி என்றும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை திட்டமிடப்பட்ட கொள்ளை என்றும் கடுமையாக யஷ்வந்த் சின்ஹா சாடினார். பணமதிப்பிழப்பு காலத்தில் மக்கள் அனுபவித்த துன்பங்கள் குறித்தும், பிரதமர் மோடியையும், முகமதுபின் துக்ளக் செய்த கோமாளித்தனங்களையும் ஒப்பிட்டு கடுமையாக யஷ்வந்த் சின்ஹா விமர்சித்துவந்தார்.
அதுமட்டுமல்லாமல், பணமதிப்பிழப்பு காலத்தில் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள், நாட்டின் வளர்ச்சியில் மத்தியஅரசு செய்த இரட்டடிப்பு புள்ளிவிவரங்களை அவ்வப்போது வெளியிட்டு பாஜகவுக்கும், மோடிக்கும் கடும் குடைச்சலை யஷ்வந்த் சின்ஹா கொடுத்தார். யஷ்வந்த் சின்ஹாவின் அதிரடியான கேள்விகளுக்கும், கூர்மையான வார்த்தை சொல்லாடல், சாடல்களுக்குப் பிரதமர் மோடிமட்டுமல்ல, நிதி அமைச்சர் அருண்ஜேட்லியும் தப்பவில்லை. ஆனால், தன்கையை வைத்து தன் கண்களைக் குத்துவது போல், யஷ்வந்த் சின்ஹாவின் மகன் ஜெயந்த் சின்ஹாவை வைத்து தந்தைக்கு எதிராக அறிக்கை எழுதவைத்து அவரை அடக்கினார்கள்.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 mins ago
இந்தியா
53 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
7 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago