இமாசலப் பிரதேசத்தில் பஸ் கவிழ்ந்து 23 பேர் பலி

By செய்திப்பிரிவு

இமாசலப் பிரதேச மாநிலம் கின்னார் மாவட்டத்தில் 400 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் தனியார் பஸ் ஒன்று வியாழக் கிழமை கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 23 பேர் பலியா யினர். 17 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து கின்னார் மாவட்ட காவல் துறை துணை ஆணையர் டி.டி.சர்மா கூறியதாவது:

சங்லா பள்ளத்தாக்கிலிருந்து கல்பா என்ற இடத்துக்கு 40 பயணிகளுடன் சென்று கொண்டி ருந்த தனியார் பஸ் ஒன்று, ரோட்ருங் என்ற கிராமத்தில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத் துக்குள்ளானது. சிம்லாவிலிருந்து 250 கி.மீ. தொலைவில் இந்த விபத்து நடந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் உடனடியாக வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 8 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இறந்தவர்களில் பஸ் ஓட்டுநர், நடத்துநரும் அடங்குவர்.

காயமடைந்த 17 பேர் உள்ளூர் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். பின்னர் ஹெலி காப்டர் மூலம் சிம்லா ஐஜிஎம்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பஸ்ஸில் பயணம் செய்தவர்களில் பெரும் பாலானவர்கள் சங்லா கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.இவ்வாறு சர்மா தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

30 mins ago

இந்தியா

33 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்