கொல்கத்தா: ஓபிசி பட்டியலில் இருந்து பல பிரிவினரை நீக்கி கொல்கத்தா உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய விருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
சேவைகள் மற்றும் பதவிகளில் காலியிடங்கள் இடஒதுக்கீடு சட்டம் 2012-ன் கீழ் மேற்கு வங்க பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் தவிர) சான்றிதழ் பெற்றவர்களின் ஓபிசி அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக கொல்கத்தா உயர் நீதிமன்றம் கடந்த மே 22-ம் தேதி தீர்ப்பளித்தது.
77 பிரிவுகளைச் சேர்ந்த முஸ்லிம் மக்களுக்கு 2010-ம் ஆண்டுக்குப் பிறகு ஓபிசி அந்தஸ்து வழங்கப்பட்டதற்குக் காரணம் அவர்கள் வாக்கு வங்கியாகக் கருதப்பட்டது மட்டுமே என்று அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த தீர்ப்பை விமர்சித்து, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த சாகர் பகுதியில் பிரச்சாரம் செய்த மேற்கு வங்க முதல்வர் மம்தா கூறியதாவது:
ஓபிசி சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டதாக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நாம் மேல்முறையீடு செய்வோம். கோடை விடுமுறைக்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago