பெங்களூரு: “பாஜக அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்ற முழக்கத்தை எப்படி எழுப்புகிறார்?” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான கலபுர்கியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இண்டியா கூட்டணி பெரும்பான்மையைப் பெறுவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் இருக்கின்றது. இண்டியா கூட்டணிக்கு மக்கள் நல்ல ஆதரவை வழங்கி வருகின்றனர்.
விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை போன்றவற்றால் மக்கள் இன்று விரக்தியில் உள்ளனர். இது மக்களுக்கும் பிரதமர் மோடிக்கும் இடையிலான தேர்தலாகும். ஜனநாயகம் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது பெரிய தாக்குதல் நடக்கிறது.
பாஜக தன்னாட்சி அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தி நிர்வாகத்தை நடத்துகிறது. இதன் காரணமாக மக்கள் அவர்கள் மீது அதிருப்தியில் உள்ளனர். இதன் காரணமாக இண்டியா கூட்டணிக்கு ஆதரவளிக்கின்றனர். அதனால் இண்டியா கூட்டணிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
» பிரியங்காவும், ராகுலும் காங்கிரஸின் சொத்துகள்: கார்கே பேச்சு
» உங்களின் 10 ஆண்டு கால பணிகளை பேசாமல் காங்கிரஸையே வசைபாடுவதா? - மோடிக்கு கார்கே கேள்வி
உதாரணமாக, 2019-ல் கர்நாடகாவில் எங்களுக்கு ஓர் இடம் கிடைத்தது. இதையடுத்து காங்கிரஸ் 4 இடங்களில் வெற்றி பெறும் என்று பிரகலாத் ஜோஷி கூறுகிறார். இது கூடுதலா? அல்லது குறைவா? எங்கள் கூட்டணி கட்சியான திமுகவின் வெற்றி வாய்ப்பும் உறுதியாக உள்ளது. கேரளாவில் அதிக இடங்களைப் பெறுவோம். மகாராஷ்டிராவில் எங்கள் கூட்டணி 50 சதவீதத்துக்கு மேல் பெறும்.
ராஜஸ்தானில் நாங்கள் பூஜ்ஜியமாக இருந்தோம். இந்த முறை ஏழு முதல் எட்டு இடங்களைப் பெறப் போகிறோம். நாடாளுமன்றத்திலும் நாங்கள் இரண்டு இடங்களை பெற்றுள்ளோம். அங்கேயும் நமது எண்ணிக்கை கூடும். சத்தீஸ்கரிலும் எங்களுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. பாஜக 100 சதவீதம் இருந்த இடங்களிலெல்லாம் அவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
பாஜக அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்ற முழக்கத்தை எப்படி எழுப்புகிறார் என எனக்கு தெரியவில்லை. இண்டியா கூட்டணி அதிக இடங்களை பெறப் போகிறது என்பதற்கு போதுமான அறிகுறிகள் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago