திருவனந்தபுரம்: கேரளாவில் அடுத்தாண்டு உள் ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் வார்டுகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காக வார்டுகளைமறு வரையறை செய்யும் வகையில் கேரள பஞ்சாயத்து ராஜ் சட்டம்,கேரள நகராட்சி சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் செய்ய அவசரசட்டத்தை கேரள அரசு கொண்டு வந்தது.
இதற்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்து, மாநில ஆளுநரின் அனுமதிக்காக கடந்த செவ்வாய்க்கிழமை அனுப்பி வைத்தது. இந்த அவசர சட்டத்தை கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் நேற்று திருப்பி அனுப்பினார்.
தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால், தேர்தல் ஆணையத்தின் அனுமதி இல்லாமல் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என விளக்கம் அளித்துள்ள ஆளுநர் ஆரிப் முகமதுகான், அவசர சட்டத்தை கேரள தலைமை செயலாளருக்கு திருப்பி அனுப்பினார். இது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago