ஆந்திராவில் தனியார் தெலுங்கு தொலைக்காட்சி யில் பணியாற்றிவந்த தொகுப்பாளினி குடும்ப பிரச்சினை காரணமாக 5-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டார்.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத் மூசாப்பேட், கூட்ஸ் ஷெட் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ராதிகா ரெட்டி (30). இவர் தனியார் தெலுங்கு தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். ராதிகா ரெட்டிக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக தனது கணவரைப் பிரிந்து கடந்த 6 ஆண்டுகளாக பெற்றோருடன் வசித்து வந்தார்.
சமீபத்தில் இவருக்கு விவாகரத்து வழக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் ராதிகா ரெட்டி, தான் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பின் 5-வது மாடிக்கு சென்று, அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கூகட்பல்லி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது இவரது கையில், ஒரு கடிதம் இருந்தது. அதில் “தன்னுடைய மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. எனது மனசாட்சியே காரணம்” என எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், ராதிகா ரெட்டியுடன் பணிபுரியும் ஊழியர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 mins ago
இந்தியா
17 mins ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago