திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பெயரில் இயங்கும் 8 போலி இணையதளங்கள் குறித்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில் தேவஸ்தான தலைமைப் பாதுகாப்பு அதிகாரி ரவிகிருஷ்ணா புகார் அளித்தார்.
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைன் மூலம் நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் முன் பதிவு செய்கின்றனர். மேலும், தங்கும் அறைகள், கூடுதல் லட்டு பிரசாதங்கள் போன்றவற்றுக்கும் முன் பதிவு வசதி உள்ளது.
இதனிடையே, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் பெயரில் பல போலி இணைய தளங்கள் இயங்கி வருவதாக புகார்கள் எழுந்தன. இதன்பேரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தேவஸ்தானத்தின் பெயரில் 8 போலி இணையதளங்கள் இயங்கி வருவது தெரியவந்தது.
இந்நிலையில், இதுதொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பதியில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் தலைமை பாதுகாப்பு அதிகாரி ரவி கிருஷ்ணா நேற்று புகார் அளித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago