கோவாக்சின் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 30% பேருக்கு உடல்நல பிரச்சினைகள்: ஆய்வில் தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கோவாக்சின் கரோனா தடுப்பூசிசெலுத்திக் கொண்ட 30 சதவீதத்துக்கும் மேற்பட் டோருக்கு உடல்நல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக பனாரஸ் இந்து பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ராஜெனிகா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ‘வேக்ஸ்செவ்ரியா’ என்ற கரோனா தடுப்பூசியை தயாரித்தது.

இந்த மருந்தைதான் இந்தியாவில் சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்தது. இதுசிலருக்கு மிகவும் அரிதாக ரத்தம்உறைதல் மற்றும் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவு போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இங்கிலாந்து நீதிமன்றத்தில் அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் சமீபத்தில் ஒப்புக் கொண்டது. இதையடுத்து உலகம் முழுவதும் தனது கரோனா தடுப்பூசி மருந்தை திரும்பப்பெறுவதாக அஸ்ட்ராஜெனிகா அறிவித்துள்ளது.

இந்நிலையில் ‘ஸ்பிரிங்கர் நேச்சர்’ என்ற இதழில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஆய்வுகட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பாரத் பயோடெக் நிறுவனம்தயாரித்த கரோனா தடுப்பூசி கோவாக்சின் செலுத்திக் கொண்டவர்களில் 30 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு ஓராண்டுக்குப்பின் பலவித உடல்நல பிரச்சினைகள்ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு கடந்த 2022 ஜனவரி முதல் 2023 ஆகஸ்ட் வரை நடத்தப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்த ஆய்வில் பங்கேற்ற 926 பேரிடம், கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு ஓராண்டுக்குப்பின் போன் மூலம் தகவல்கள் பெறப்பட்டன. சுமார் 50% பேருக்கு சுவாசப் பாதையில் தொற்று ஏற்பட்டதாக தெரிவித்தனர். ஒரு சதவீதம் பேருக்கு பக்கவாதம், நரம்பு மண்டல பாதிப்பு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. மூன்றில் ஒரு பகுதியினருக்கு தோல் பிரச்சினைகள்,சில பொதுவான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

பொதுவான உடல்நல பிரச்சினைகள் 8.9% பேருக்கும், தசை பிரச்சினைகள் 5.8% பேருக்கும், நரம்பு மண்டல பிரச்சினைகள் 5.5% பேருக்கும் ஏற்பட்டன. பெண்களில் 4.6% பேருக்கு மாதவிடாய் பிரச்சினைகள் ஏற்பட்டதும் கண்டறியப்பட்டது.கண் பிரச்சினைகள் 2.7% பேருக்கும், ஹைபோதைராய்டு பிரச்சினை 0.6% பேருக்கும் ஏற்பட்டன.

ஆய்வில் பங்கேற்றவர்களில் 3 பெண்கள் உட்பட 4 பேர்இறந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கு நீரிழிவு பிரச்சினை இருந்தது. 3 பேருக்கு உயர் ரத்த அழுத்தபிரச்சினை இருந்தது. இவர்களில் 2 பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு முன்பே கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இறந்தவர்களின் இருவருக்கு பக்கவாதம் முக்கிய பாதிப்பாக இருந்தது. இறப்புக்கான உறுதியான தொடர்பு இல்லாததால், இந்த நிகழ்வுகளில் இருந்துஎந்த முடிவுக்கும் வரமுடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE