புதுடெல்லி: ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை பகிர்ந்த பதிவில், “ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சி கொண்டேன். இத்தகைய கோழைத்தனமான, கொடூரமான சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். மேலும், பிரதமர் ஃபிகோ விரைவில் குணம் பெற வாழ்த்துகிறேன். இத்தருணத்தில் ஸ்லோவாகியா குடியரசு மக்களுடன் இந்தியா துணை நிற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, நேற்று ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டது. ஸ்லோவாகியாவின் ஹன்ட்லோவா நகரில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற பின் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட்து. இதில் காயமடைந்த பிரதமர் ராபர்ட் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை துப்பாக்கியால் சுட்ட நபரை போலீஸார் மடக்கி பிடித்தனர்.
அவர் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில் பிரதமர் மோடி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளதோடு அந்நாட்டு மக்களுக்கும் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
» மக்களின் கஷ்டங்களை கேட்க பிரதமர் மோடிக்கு நேரமில்லை: பிரியங்கா காந்தி விமர்சனம்
» இந்திய தேர்தலை எதிர்மறை கோணத்தில் காட்டுவதா? - மேற்கத்திய ஊடகங்களுக்கு வெளியுறவு அமைச்சர் கேள்வி
ஃபிகோ அரசும் சர்ச்சைகளும்.. ஸ்லோவாகியாவின் பிரதமராக கடந்த செப்டம்பரில் ராபர்ட் ஃபிகோ மீண்டும் பொறுப்பேற்றார். அவர் மீண்டும் ஆட்சியமைத்த சில மாதங்கள் அவரின் ஆட்சி பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டது. குறிப்பாக உக்ரைனுக்கான ராணுவ உதவியை நிறுத்தியது, அரசு தொலைக்காட்சி மற்றும் ரேடியோ ஒளிபரப்பை நிறுத்தியது என அவரது அரசின் முடிவுகள் சர்ச்சைகளை சந்தித்தது. இந்நிலையில் அவர் மீது நேற்று கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. மேலும் வாசிக்க>> ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு - காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago