சச்சின் டெண்டுல்கரின் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

By செய்திப்பிரிவு

மும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பாதுகாவலர் பிரகாஷ் கப்டே என்பவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அவர் தனது துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். மகாராஷ்டிர மாநிலத்தின் ஜாம்னர் நகரைச் சேர்ந்த இவர், சில தினங்கள் முன்தான் சொந்த ஊருக்கு விடுமுறைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், மே 14-ம் தேதி நள்ளிரவு 1:30 மணியளவில் தனது வீட்டில் வைத்து தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஜாம்னர் காவல் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக காவல் ஆய்வாளர் கிரண் ஷிண்டே கூறுகையில், "முதற்கட்ட விசாரணைகளின்படி, சில தனிப்பட்ட காரணங்களுக்காக தற்கொலை செய்திருக்கலாம் என சந்திக்கிறோம். முழு விசாரணைக்கு பிறகே மற்ற விவரங்கள் தெரியவரும். தற்போது அவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

பிரகாஷ் கப்டே கடந்த சில வருடங்களாக சச்சின் டெண்டுல்கரின் விவிஐபி செக்யூரிட்டியில் காவலராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்