ஹைதராபாத்: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதாகி திஹார் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள, தெலங்கானா மாநில மேலவை உறுப்பினரும், முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளுமான கவிதாவுக்கு நீதிமன்ற காவல் நிறைவுற்றதால், அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள், காணொலி மூலம் நீதிமன்ற விசாரணைக்கு நேற்று ஆஜர்படுத்தினர்.
அப்போது, விசாரணை நடைபெற்று வருவதால், கவிதாவுக்கு ஜாமீன் வழங்க வேண்டாம் என அமலாக்கத் துறை அதிகாரிகள் நீதிபதியை கேட்டுக்கொண்டனர். மேலும், இவ்வழக்கு தொடர்பாக 8000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்தனர். அந்த குற்றப்பத்திரிகை மீதான விசாரணை குறித்து வரும் 20-ம் தேதி தெரிவிப்பதாகவும், அது வரை கவிதாவுக்கு நீதிமன்ற காவலை நீட்டிப்பதாகவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago