2 மாதங்களில் விதிமீறல் நடவடிக்கைகள் என்னென்ன? - தேர்தல் ஆணையம் பட்டியல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த இரண்டு மாதங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையம் 2-வது அறிக்கையை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கிய இந்த தேர்தல், ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது.

இந்த நிலையில், பொதுத் தேர்தலின் போது அரசியல் கட்சிகளின் அளித்த புகார்களின் அடிப்படையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையம் 2-வது அறிக்கையை வெளியிட்டுள்ளது.

புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த சில விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்ட 2 மாதங்களில் எடுக்கப்பட்ட சில முக்கிய நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் பின்வருமாறு:

* மக்களவைக்கான பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட 16 மார்ச் 2024 அன்று நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தது. தற்போது வரை நான்கு கட்டத் தேர்தல்கள் முடிவடைந்துள்ளன.

* தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து சுமார் இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் மற்றும் தொகுதி நிலையில் வேட்பாளர்களின் பிரச்சாரம் பெரும்பாலும் எவ்விதப் பிரச்சினையும் இன்றி சுமுகமாக உள்ளது.

* வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் நடவடிக்கையாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து இதுவரை 63 செய்திக் குறிப்புகளை வெளியிட்டுள்ளது.

* இதுவரை, 16 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 25 பிரதிநிதிகள் தேர்தல் ஆணையத்தை சந்தித்து தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து தங்களது குறைகள் மற்றும் புகார்களை பதிவு செய்துள்ளனர். இது தவிர, மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளை பல பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.

* அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உடனடியாக நேரம் ஒதுக்கப்பட்டு, அவற்றின் குறைகள் கேட்கப்பட்டன.

* தேர்தல் ஆணையம் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகள் நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களால் பிரச்சாரம் தொடர்பான புகார்களைத் தவிர சுமார் 425 முக்கிய புகார்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 400 புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அல்லது தீர்வு காணப்பட்டுள்ளது.

* காங்கிரஸ், பாஜக மற்றும் பிற கட்சிகளால் முறையே 170, 95 மற்றும் 160 புகார்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்தப் புகார்களில் பெரும்பாலானவை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* காங்கிரஸ் புகாரின் பேரில், ஹரியானாவில் உள்ள ஒரு மாவட்டத்தின் தேர்தல் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார்.

* குஜராத்தின் தாஹோத் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்குச் சாவடியைக் கைப்பற்றி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ததாக காங்கிரஸ் அளித்த புகாரின் பேரில், மறுவாக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது.

* தெலங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி அளித்த புகாரின் பேரில், பிஆர்எஸ் கட்சித்தலைவர், பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் நேர்காணல்களில் பேசுவதற்கு 48 மணி நேரம் தடை விதிக்கப்பட்டது.

* பி.ஆர்.எஸ் அளித்த புகாரின் பேரில், தெலங்கானாவில் ஒரு அமைச்சருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டார்.

* காங்கிரஸ் அளித்த புகாரின் பேரில், கர்நாடக பாஜகவின் 'எக்ஸ்' கணக்கிலிருந்து ஒரு பதிவு நீக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது.

* ஆந்திராவில் காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் பல்வேறு அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

* மேற்கு வங்கத்தில் வன்முறையைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக சில காவல் துறை அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.

* தெலங்கானாவில் வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி அருகே 100 மீட்டர் சுற்றளவில் வாக்காளர்களிடம் பிரச்சாரம் செய்ததற்காகவும், செல்வாக்கு செலுத்தியதற்காகவும் தெலங்கானாவில் பாஜக வேட்பாளருக்கு எதிராக இரண்டு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

* மே 14, 2024 நிலவரப்படி விதிமீறல்கள் குறித்து சி-விஜில் செயலி மற்றும் ஆணையத்தின் இணையதளத்தில் மொத்தம் 4,22,432 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 4,22,079 (99.9%) புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் 88.7% புகார்கள் சராசரியாக 100 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் தீர்க்கப்பட்டுள்ளன.

* சி-விஜில் செயலியின் தாக்கம் காரணமாக, சட்டவிரோத விளம்பரப் பலகைகள், சொத்துக்களை சிதைத்தல், அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பிரச்சாரம் செய்தல், அனுமதிக்கப்பட்ட வாகனங்களை விட கூடுதல் வாகனங்களைப் பயன்படுத்துதல் ஆகியவை கணிசமாகக் குறைந்துள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்