“ஆந்திராவில் ஜெகன் கட்சி மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும்” - பிரசாந்த் கிஷோர் கணிப்பு

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: "ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய தோல்வி கிடைக்கும்" என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார்.

ஆந்திராவின் சட்டசபை மற்றும் மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று ஒரேகட்டமாக தேர்தல் நடந்தது. சில இடங்களில் வன்முறையுடன் தேர்தல் நடந்து முடிந்தது. இந்நிலையில், இம்முறை ஆந்திர தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய தோல்வி கிடைக்கும் என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார்.

இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் மேலும் கூறும்போது, "ஆந்திர சட்டசபைத் தேர்தலில் இம்முறை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 51 இடங்களை மட்டுமே வெல்லும். கடந்த சில மாதங்களாக ஜெகன் தோல்வியை சந்திக்க நேரிடும் என்று கூறி வருகிறேன். இது எனது கணிப்பு.

சட்டசபைத் தேர்தலில் இம்முறை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 51 - 67 இடங்களை பிடிக்கும். அதேநேரம், தெலுங்கு தேசம் - பாஜக கூட்டணி 106+ இடங்களை வெல்லலாம். மக்களவை தொகுதிகளை பொறுத்தவரை தெலுங்கு தேசம் கூட்டணிக்கு 15 இடங்களும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 8 இடங்களும் கிடைக்கும்" என்று பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

23 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்