குலு: இமாச்சல் பிரதேசத்திலுள்ள மண்டி தொகுதியிலிருந்து பாஜக சார்பில் மக்களவைத் தேர்தலில் நடிகை கங்கனா ரனாவத் போட்டியிடுகிறார். இந்த சூழலில் இந்தியாவுக்கு மெய்யான சுதந்திரம் கடந்த 2014-ல் தான் கிடைத்தது என அவர் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை அன்று இமாச்சலின் குலு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் அவர் பங்கேற்றார். அப்போது மதத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது. பின்னர் ஏன் இந்தியா ‘இந்து தேசம்’ என அறிவிக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
“நம் முன்னோர்கள், முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் அடக்குமுறைக்கு ஆளாகி அடிமைப் படுத்தப்பட்டனர். பின்னர் காங்கிரஸின் தவறான ஆட்சியையும் பார்த்தார்கள். ஆனால், நமக்கான அசல் சுதந்திரம் 2014-ல் தான் கிடைத்தது.
அது சிந்திக்கும் சுதந்திரம், சனாதன சுதந்திரம், மத சுதந்திரம் மற்றும் இந்த தேசத்தை இந்து தேசமாக ஆக்குவதற்கான சுதந்திரம்” என தெரிவித்தார். இமாச்சலில் உள்ள நான்கு மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago