மாமல்லபுரம் கலை சின்னங்களை சுற்றிப் பார்க்க தலைமை தேர்தல் அதிகாரி வருகை

By செய்திப்பிரிவு

மாமல்லபுரம்: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தனது குடும்பத்தோடு, நேற்று மாலை மாமல்லபுரம் கடற்கரை கோயில்வளாகம் வந்தார்.

அவரை, செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயணசர்மா வரவேற்று, கடற்கரை கோயிலை சுற்றிப் பார்க்க அழைத்து சென்றார். தொடர்ந்து, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு குடும்பத்தோடு கடற்கரை கோயிலை சுற்றிப் பார்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டு, அங்குள்ள புல் தரையில் அமர்ந்து வருவாய்த் துறை அதிகாரிகளுடன் மக்களவை தேர்தல் சம்பந்தமாக சிறிது நேரம் கலந்துரையாடினார். அப்போது, சுற்றுலா வழிகாட்டி ஒருவர் புராதன சின்னங்கள் எந்த காலத்தில் எந்த மன்னரால் செதுக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு வரலாற்று தகவல்களை தெளிவாக விளக்கிக் கூறினார்.

இதையடுத்து, 63-வது திவ்ய தேசமாக திகழும் மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலுக்கு சென்றார்.

அங்கு, கோயில் நிர்வாகம் சார்பில் மாலையணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE