நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீடு தொடரும் என கர்னூலில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசினார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது: சந்திரபாபு நாயுடு இரட்டை வேடம் போடுகிறார். ஒருபுறம் முஸ்லிம்களுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீட்டை ரத்து செய்வதாக கூறிவரும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டே, நான் சிறுபான்மையினரின் நண்பன் என்றும் கூறிக்கொள்கிறார்.
ஆனால், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவில் 4 சதவீத முஸ்லிம் இட ஒதுக்கீடு தொடரும். 4 நாட்களில் ஆந்திராவில் குருஷேத்திர போர் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் எம்.பி.க்களையும், எம்.எல்.ஏக்களையும் தேர்வு செய்யும் தேர்தல் அல்ல.
எதிர்காலத்தை நினைவில் கொண்டு மக்கள் நலத் திட்டங்களை யார் சரியாக செயல்படுத்துவார்களோ அவர்களுக்கு முடிசூடும் தேர்தல். சந்திரபாபு நாயுடுவுக்கு வாக்களித்தால், நல திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது போல் ஆகிவிடும்.
» ‘இந்த இன்னிங்ஸ் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்’ - சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்
» சிறுவயது மகனை வாக்களிக்கச் சொன்ன பாஜக தலைவர் மீது வழக்குப் பதிவு
சந்திரபாபு நாயுடு 3 முறை, 14 ஆண்டுகள் முதல்வராக இருந்து என்ன பயன் ?ஏழைகளுக்கு என எந்தவொரு திட்டத்தையும் அவர் வகுக்கவில்லை. நான்கடந்த 5 ஆண்டுகளில் ஆந்திராவி ல் ஜாதி, மதம், கட்சி பாகுபாடின்றி வளர்ச்சிக்கான நல திட்டங்களை வீடு, வீடாக கொண்டு போய் சேர்த்துள்ளேன். இவ்வாறுஜெகன் மோகன்ரெட்டி கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
49 mins ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago