ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டாம்: நீதிமன்றத்தில் சிபிஐ மனு

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: தேர்தல் பிரச்சாரம் மற்றும் வாக்குப்பதிவுகள் நிறைவடைந்த பின்னர், ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தனது குடும்பத்தோடு பிரான்ஸ், லண்டன், சுவிஸ் ஆகிய நாடுகளுக்கு இம்மாதம் 17-ம் தேதி முதல் ஜூன் மாதம் 1-ம் தேதி வரை சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளார்.

இதற்கு அனுமதி பெறுவதற்காக ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் அவர் மனுத் தாக்கல் செய்தார். இதற்கு சிபிஐ தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யும் படி நீதிமன்றம் வலியு றுத்தியது.

இதையடுத்து சிபிஐ நேற்று தாக்கல் செய்த பதில் மனுவில், ‘‘ஜெகன்மோகன் ரெட்டி மீது பல்வேறு சொத்து குவிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவருக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல அனுமதி வழங்க வேண்டாம்’’ எனக் கூறியது.

இதையடுத்து இந்த விசாரணையை வரும் 14-ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக ஹைதராபாத் உயர் நீதிமன்றம் அறிவித்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE