ஆதார் சட்டத்தின் படி தனி நபர்களின் சாதி, மத, இன அடையாளங்களை பதிவு செய்வதில்லை, எனவே இத்தகைய மக்கள்தொகையியல் விவரங்களைக் கொண்டு பாகுபாடு செய்வதற்குப் பயன்படுத்த முடியாது என்பதை உறுதி செய்துள்ளோம் என்று ஆதார் ஆணையம் (UIDAI) உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.
ஆதார் ஆணையத்தின் வழக்கறிஞர் ராகேஷ் திவேதியின் பிரமாணங்களை சந்திராசூட் மறுவார்த்தைகளில் தெரிவித்தார்.
ஆதார் ஆணையம் கூறியதாவது:
மக்கள்தொகையியல் தேவைகளில் இனம், மதம், சாதி, உள்ளிட்ட அடையாளங்கள் பதிவு செய்யப்படுவதில்லை. இதைக் கொண்டு பாகுபாடு செய்வதும் இதன் மூலம் தடுக்கப்படுகிறது. இந்த விவரங்களை விலக்குதல் மூலம் தனியுரிமை பாதுகாக்கப்படுகிறது, என்று கூறியுள்ளது.
ஆகஸ்ட் 2017-ல் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணையின் போது நீதிபதி சந்திராசூட் தனியுரிமை, அந்தரங்கத் தகவல்கள் என்பது வாழ்க்கையின் உள்ளடங்கிய பகுதி என்றும் சுதந்திரம் என்பது நம் நாட்டு அரசியல் சட்டத்தில் புனிதமாக்கப்பட்ட அங்கம் என்றும் கூறினார்.
அதாவது தனிமனித அந்தரங்கத் தகவல்கள் என்பது இயல்பான உரிமை, அரசு இதில் உள்ளே நுழைய முடியாது, அனைத்துத் தனிநபர்களுக்கும் தங்கள் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கான சம உரிமை உள்ளது.
அதாவது தனியுரிமை என்பது அடிப்படை உரிமையா என்ற விவாதங்களின் போது நீதிமன்றம் மேற்கண்டவாறு கூறியிருந்தது.
ஆனால் ஆதார் ஆணைய வழக்கறிஞர் திவேதி மக்கள்தொகையியல் சார்ந்த விவரங்களான பெயர், வயது உள்ளிட்டவைகள் மீது தனியுரிமையை யாரும் கோர முடியாது என்றார்.
4 அடுக்கு அடையாளங்கள்:
திவேதியின் பிரமாணங்களை தன் மொழியில் கூறிய சந்திரா சூட், அதில் மக்கள்தொகையியல், விருப்பத் தெரிவு மக்கள் தொகையியல், பயோமெட்ரிக்ஸ், மையமான பயோமெட்ரிக்ஸ்களான கைரேகை, கண்விழிப் பதிவு ஆகியவை 4 அடுக்கு அடையாளங்களாகும் என்றார்.
இதில் மைய பயோமெட்ரிக்ஸ் விவரங்களை ஆதார் ஆணையம் பகிரவில்லை என்று திவேதி கூறியுள்ளார்.
ஆனால் திவேதியின் வாதங்களைக் கேட்ட நீதிபதி ஏ.கே.சிக்ரி, மைய சேமிப்பு வசதியில் தனிநபர் குறித்த தகவல்கள் சேர்க்கப்படுவது பற்றி மக்கள் இன்னமும் அச்சப்படுகின்றனர் என்றார்.
இதற்கு திவேதி, “உண்மையான பயங்கள் குறித்துதான் எங்களுக்குக் கவலை. தண்ணீரைக் கண்டே பயப்படுபவர்கள் குளத்தில் குதிக்க முடியாது. நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்று பதிலுரைத்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago