அடுத்த ஆண்டு முதல் வெடிபொருள் இறக்குமதியை நிறுத்த இந்தியா முடிவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியா அதன் ராணுவத் தளவாடங்களுக்கு வெளிநாடுகளை பெரிதும் சார்ந்து இருக்கிறது. ராணுவ தளவாட இறக்குமதியில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. உலகளாவிய ஆயுத இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 9.8 சதவீதமாக உள்ளது. இந்நிலையில், பாதுகாப்புத் துறையில் சுயசார்பை எட்ட இலக்கு நிர்ணயித்து இந்தியா பயணித்து வருகிறது.

இது குறித்து ராணுவ மேஜர் ஜெனரல் வி.கே. சர்மா கூறுகையில், “தற்போது இந்திய ராணுவம் ஆண்டுக்கு ரூ.6,000 கோடி முதல் ரூ.8,000 கோடி வரையில் குண்டுகளை கொள்முதல் செய்துவருகிறது. ஏற்கெனவே வெளிநாடுகளிலிருந்து கொள்முதல் செய்வது படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது 10 சதவீத அளவிலேயே குண்டுகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. 2025-26 நிதி ஆண்டு முதல் அந்த இறக்குமதியும் நிறுத்தப்படும்.

இனி இந்திய ராணுவம் தனக்குத் தேவையான குண்டுகளை உள்நாட்டிலேயே கொள்முதல் செய்யும். தயாரிப்பு செலவு மிகுந்த குண்டுகள் மட்டுமே வெளிநாடுகளிலிருந்து வாங்கப்படும். தற்போது இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் வெடிபொருள் தயாரிப்பில் இறங்கியுள்ளன. இதனால், இந்தியா விரைவிலேயே வெடிபொருள் தயாரிப்பில் சர்வதேச சந்தையாக மாறும்” என்று அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்