பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் முன்னாள் செய்தித் தொடர்பாளர் ராதிகா கேரா!

By செய்திப்பிரிவு

டெல்லியிலுள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் கட்சியின் மூத்த தலைவர் வினோத் தாவ்டே முன்னிலையில் காங்கிரஸ் முன்னாள் செய்தித் தொடர்பாளர் ராதிகாகேரா, நடிகர் சேகர் சுமன் உள்ளிட்டோர் அதிகாரப்பூர்வமாக கட்சியில் இணைந்துள்ளனர்.

நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை ராதிகா கேரா வைத்திருந்தார். அப்போது அவர் கூறும்போது, “நான் என் பாட்டியுடன் ராமர் கோயிலுக்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து திரும்பிய பிறகு, என் வீட்டு வாசலில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்கிற வாசகத்துடன் காவிக் கொடியை வைத்தேன், இந்த நிகழ்வைபுகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து என்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டேன்.

இதனால் கட்சி நிர்வாகிகள் என்மேல் மிகவும் கோபத்தை கொட்டி தீர்த்தனர். என் வாழ்நாளில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கட்சியில் தீவிரமாக பணியாற்றி உள்ளேன். இந்திய தேசிய மாணவர் சங்கம் முதல் காங்கிரஸின் ஊடகப்பிரிவு வரை முழு நேர்மையுடன் பணியாற்றினேன்.

இருந்தபோதிலும், நான் அயோத்தியில் ராமரை தரிசித்ததால் இவ்வளவு கடுமையான எதிர்ப்பைச் சந்திக்க நேர்ந்தது” என்று தெரிவித்தார்.

இந்நிலையில்தான் நேற்று அவர் பாஜகவில் கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ளார். அவருடன் பாலிவுட் நடிகர் சேகர் சுமன் உள்ளிட்டோர் இணைந்தனர்.

பாலிவுட் படங்களில் நடித்து வரும் சேகர் சுமன் டி.வி. சீரியல்களிலும் நடித்து புகழ்பெற்றவர். இவர், முன்புகாங்கிரஸில் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார். 2012-ல்அவர் காங்கிரஸிலிருந்து விலகிய பின்னர் எந்தக் கட்சியிலும் சேராமல் இருந்தார். இந்நிலையில்தான் அவர் பாஜகவில் இணைந்துள்ளார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இணைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்