புதுடெல்லி: மக்களவைத் தேர்தலுக்கான 3-வது கட்ட வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
இன்று நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் இளைஞர்கள் வேலையின்மையை எதிர்கொண்டு வருகின்றனர். பெண்கள்பாலியல் கொடுமைகளை சந்திக்கின்றனர். தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை மக்கள் மிக மோசமான பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியாலும் பாஜகவாலும் உருவாக்கப்பட்ட சூழல் இது. என்ன விலை கொடுத்தாவது அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற வெறியில் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக வெறுப்பையும் பொய்யையும் பரப்புகின்றனர்.
நம்முடைய அரசியலமைப்பும் ஜனநாயகமும் கடும் நெருக்கடியில் இருக்கின்றன. நாட்டின் ஒற்றுமை, சமத்துவம் சிதறுண்டுள்ளது. ஏழைகள் தனித்து விடப்பட்டுள்ளனர். இந்தச் சூழலை மாற்ற உங்களின் ஆதரவை கோருகிறேன்.
» நாடு முழுவதும் 3-ம் கட்ட மக்களவை தேர்தல்: 93 தொகுதிகளில் 64% வாக்குப்பதிவு
» 3 சுயேச்சை எம்எல்ஏ ஆதரவு வாபஸ் - ஹரியாணாவில் பாஜக பெரும்பான்மை இழந்தது
காங்கிரஸ் கட்சி நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் நீதிக்காகவும் உழைத்துக் கொண்டிருக்கிறது.
சமத்துவமிக்க வளமான எதிர்காலத்துக்கு காங்கிரஸுக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
15 mins ago
இந்தியா
23 mins ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago