புதுடெல்லி: மேற்கு வங்க ஆசிரியர்கள் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறி 25,753 ஆசிரியர்களின் பணிநியமனத்தை ரத்து செய்த கொல்கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் நேற்று தடைவிதித்தது. மேலும், இந்த விவகாரத்தில் மேற்கு வங்க அரசை உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.
மேற்கு வங்கத்தில் அரசு மற்றும்அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாநில பள்ளிக்கல்வித் துறை மூலம்25,753 பேர் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்டனர். இதில் ஊழல் நடந்திருப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி கொல்கத்தா உயர்நீதிமன்றம் அந்தப் பணி நியமனங்களை ரத்து செய்து உத்தரவிட்டது.
கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி,பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர்அடங்கி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. நீண்ட வாதங்களுக்குப் பிறகு 25,753 ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யும் கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று தடைவிதித்தது.
இது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து பணிநீக்கம் செய்யப்படும் ஆபத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பணி சாராதவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக அமைந்தது.
» நாடு முழுவதும் 3-ம் கட்ட மக்களவை தேர்தல்: 93 தொகுதிகளில் 64% வாக்குப்பதிவு
» 3 சுயேச்சை எம்எல்ஏ ஆதரவு வாபஸ் - ஹரியாணாவில் பாஜக பெரும்பான்மை இழந்தது
தலைமை நீதிபதி சந்திரசூட் மேலும் கூறுகையில், “சிபிஐ விசாரித்து வரும் 8,000 ஆசிரியர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உறுதியானால் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் உத்தரவு அவர்களுக்கு பொருந்தும். மேலும், அவர்கள் தாங்கள் பெற்ற சம்பளத்தை திரும்பக் கொடுக்க வேண்டும்.
அரசு வேலை மிகவும் அரிதானது. அதன் மீதுள்ள பொதுமக்களின் நம்பிக்கை பொய்த்துப் போனால் எதுவும் மிஞ்சாது. இது,அமைப்பு முறை சார்ந்த மோசடி. சமூக இயக்கத்துக்கு அரசு வேலைமிகவும் முக்கியமானது. இதுபோன்ற நடவடிக்கைகளால் மக்கள் அதன் மீதுள்ள நம்பிக்கையை இழந்துவிடுவர். அதை நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள்? ஆசிரியர் பணி நியமனங்களுக்கான தரவுகள் மற்றும் ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் பராமரிக்க நீங்கள் கடமைப்பட்டவர்கள். ஆனால், இப்போது அந்த தரவுகள் உங்களிடம் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. உங்களுக்கு சேவை வழங்குபவரிடம் உள்ள தரவுகளை கட்டுப்பாட்டுடன் பராமரிப்பது உங்களின் கடமை" என்று மேற்கு வங்க மாநில அரசு வழக்கறிஞரிடம் கண்டிப்புடன் கூறினார்.
முன்னதாக, கொல்கத்தா உயர் நீதிமன்றம் ஆசிரியர் பணியிடங்களை தன்னிச்சையாக ரத்து செய்துள்ளது. இந்த உத்தரவு பள்ளிக் கல்வியில் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தும். புதிய கல்வியாண்டு தொடங்கவுள்ள சூழ்நிலையில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மாணவர்கள் மோசமாக பாதிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்று வழக்கறிஞர் அஸ்தா சர்மா மூலம் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் மேற்கு வங்க அரசு தெரிவித்திருந்தது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago