உத்தரப் பிரதேசத்தில் சமஸ்கிருதம் கற்று தரும் மதரஸா

By ஏஎன்ஐ

உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூரில் உள்ள மதரஸா பள்ளிக்கூடத்தில் மற்ற பாடங்களுடன் சமஸ்கிருத மொழி பாடமும் கற்றுத்தரப்படுகிறது.

இந்த மதரஸா பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் இந்தி, ஆங்கிலம், உருது மொழிகளோடு சேர்ந்து சமஸ்கிருதத்தையும் பயின்று வருகின்றனர். இது, மத நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும் விதமாக அமைந்துள்ளது.

கோரக்பூரில் உள்ள தாருல் உலாம் ஹசானியா மதரஸா பள்ளியில் பயிலும் மாணவர்கள் தாங்கள் கற்றுவரும் பாடங்களையே வெறும் பாடமாக அன்றி வாழ்க்கைக்கான பாடம்போல அனுபவித்து கற்றுவருகிறார்கள். அவர்களது ஆசிரியர்களும் மாணவ மாணவியருக்கு கற்றுத்தருவதை ஒரு இனிய பணியாகவே கருதுகிறார்கள்.

இதுகுறித்து கோரக்பூர் மதரஸாவில் பயிலும் மாணவர் ஒருவர் ஏஎன்ஐயிடம் கூறுகையில்,

''நாங்கள் சமஸ்கிருதம் பயில்வதை சிறப்பாக உணர்கிறோம். எங்கள் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை நன்றாக விளக்கி புரிய வைப்பார்கள். எங்கள் பெற்றோர்கள் கூட இதற்கு உதவியாக இருக்கிறார்கள்'' என்றார்.

கோரக்பூர் மதரஸாவின் முதல்வர், ஹஃபிஸ் நஸ்ரே ஆலம் தெரிவிக்கையில்,

''இது உத்தரப் பிரதேச கல்வி வாரியத்தின் கீழ் இயங்கிவரும் கல்வி நிறுவனங்கள் யாவும் ஒரு நவீன அமைப்பாக செயல்பட்டு வருகின்றன என்று குறிப்பிட்டார். அங்கு அரபு மொழியும் கற்பிக்கப்படுகிறது.

எங்கள் பள்ளியைப் பொறுத்தவரை ஆங்கிலம், இந்தி, அறிவியல், கணிதம், உருது மற்றும் அரபு ஆகிய பாடப்பிரிவுகள் கற்பிக்கப்படுகின்றன. 5ஆம் வகுப்புக்கு மேற்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு சமஸ்கிருதம் சொல்லித்தரப்படுகிறது.

 மாணவர்களின் பெற்றோரும் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர், அவர்கள் இதுகுறித்து இதில் எந்தவொரு ஆட்சேபனையும் எழுப்பவில்லை'' என்றார்.

மதரஸாவில் சொல்லித்தரும் பாடங்கள் இன்றுள்ள நடைமுறை வாழ்க்கைக் கேற்ற பயன்படும் விதமாக நவீன மயப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் அக்டோபர் மாதம் உத்தரப் பிரதேசம் துணை முதல்வர் தினேஷ் ஷர்மா கூறுகையில், ‘‘மாநில மதரஸா வாரியம் அளித்துள்ள பரிந்துரைகளின்படி மாநிலம் முழுவதும் மதரஸா பள்ளிகளில் என்சிஇஆர்டி பாடப்புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன’’  எனக்கூறினார்.

உத்தரப் பிரதேசத்தில் தற்போது, 19,000 அங்கீகரிக்கப்பட்ட மற்றும் 560 நிதி உதவி மதரஸாக்கள் மாநிலம் முழுவதும் இயங்கிவருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

மேலும்