ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெவ்வேறு கட்சிகளின் சார்பில் போட்டி

By செய்திப்பிரிவு

புவனேஸ்வர்: ஒடிசாவின் குனுபூர் சட்டப்பேரவை தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ ரகுநாத் கமங். இவர் மே 13-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் இதே தொகுதியில் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) சார்பில் போட்டியிடுகிறார்.

இவரை எதிர்த்து அவரது பேரன் சத்யஜித் கமங் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். சத்யஜித்தின் தாய் எம்எல்ஏ ரகுநாத்தின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று, இந்த தொகுதியில் இவர்களை எதிர்த்து பாஜக சார்பில் சத்தியஜித்தின் மருமகன் திரிநாத் கமங் போட்டியிடுகிறார். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கடும் போட்டி தேர்தல் களத்தை விறுவிறுப்பாக்கியுள்ளது.

நவீன் பட்நாயக் அரசு மேற்கொண்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களை முன்னிறுத்தி பிஜேடி வேட்பாளர் ரகுநாத் கமங் வாக்கு சேகரித்து வருகிறார்.
பாஜக வேட்பாளர் திரிநாத், பிரதமரின் மேம்பாட்டு பணிகளை சுட்டிக்காட்டி வாக்குகளை வேட்டையாடி வருகிறார்.

தேர்ந்தெடுத்தால், சுகாதார வசதி மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை நிறுவுவதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பேன் என காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சத்யஜித் பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்து வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்