1981-ல் அமேதி மக்களவைத் தொகுதியில் 84% வாக்குகளுடன் வெற்றி பெற்றார் ராஜீவ் காந்தி!

By செய்திப்பிரிவு

உத்தர பிரதேசத்தின் அமேதி மக்களவைத் தொகுதி, காங்கிரஸின் கோட்டையாக இருந்தது. கடந்த 1967-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் வி.டி. பாஜ்பாய், அமேதி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார். கடந்த 1971-ம் ஆண்டிலும் அவர் மீண்டும் அமேதி எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த 1977-ம் ஆண்டில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி அமேதி தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்டார்.

அவசர நிலை காலத்துக்குப் பிறகு நடைபெற்ற தேர்தல் என்பதால் அமேதி தொகுதியில் காங்கிரஸுக்கு 34.47 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன. ஜனதா கட்சியை சேர்ந்த ரவீந்திர பிரதாப் சிங் 60.47 சதவீத வாக்குகளுடன் அமோக வெற்றி பெற்றார்.

கடந்த 1980-ம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் சஞ்சய் காந்தி முதல்முறையாக வெற்றி பெற்றார். ஆனால் அதே ஆண்டு ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற விமான விபத்தில் அவர் உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து கடந்த 1981-ம் ஆண்டு அமேதி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் இந்திரா காந்தியின் மூத்த மகன் ராஜீவ் காந்தி போட்டியிட்டு 84.18 சதவீத வாக்குகளுடன் அமோக வெற்றி பெற்றார்.

இதன்பிறகு தொடர்ச்சியாக 3 முறை அமேதி தொகுதி எம்பியாக ராஜீவ் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 1991-ம் ஆண்டில் அவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு அமேதி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சதீஷ் சர்மா வெற்றி பெற்றார்.

1996-ம் ஆண்டு தேர்தலிலும் அமேதியில் இருந்து அவர் எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். 1998-ம் ஆண்டு தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவினார். அப்போது காங்கிரஸுக்கு 31.1 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இது அமேதியில் அந்த கட்சி சந்தித்த மோசமான தோல்வி ஆகும்.

இதன்பிறகு கடந்த 1999-ம் ஆண்டு அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி 67.12 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றார். கடந்த 2004-ம் ஆண்டில் அவர் ரேபரேலி மக்களவைத் தொகுதிக்கு மாறினார்.

அந்த ஆண்டில் சோனியா காந்தியின் மகன் ராகுல் காந்தி அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2009, 2014-ம் ஆண்டு அதே தொகுதியில் இருந்து அவர் எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம், ராகுல் காந்தி தோல்வி அடைந்தார்.

இதுவரை 14 முறை அமேதி மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றிருக்கிறது. இதில் 11 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. 1977, 1998, 2019 ஆகிய ஆண்டுகளில் மட்டும் காங்கிரஸ் அல்லாத வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தற்போதைய மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் அமேதியில் களமிறங்கி உள்ளார்.

அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கிஷோரி லால் சர்மா வேட்பாளராக முன்நிறுத்தப்பட்டு உள்ளார். இதன்காரணமாக அமைச்சர் ஸ்மிருதி இரானியின் தேர்தல் வெற்றி இப்போதே உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

33 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்