பெங்களூருவில் 5 மாதங்களுக்குப் பிறகு மழை: கடும் வெயிலில் வாடிய மக்களுக்கு மகிழ்ச்சி!

By செய்திப்பிரிவு

பெங்களூரு: 5 மாதங்களுக்குப் பிறகு பெங்களூருவில் நேற்றும் இன்றும் மழை பெய்துள்ளது. கடைசியாக நவம்பர் 23 அன்று பெங்களூருவில் மழை பதிவானது. அதன் பின்னர் அந்நகரம் வறண்ட வானிலையைதான் கண்டு வந்தது. தற்போது அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்.

இந்தியாவின் தோட்டநகரம் என அழைக்கப்படும் பெங்களூருவில் கடும் த‌ண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. அதாவது, பெங்களூரில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் இருந்து வந்த நிலையில், அப்பகுதி மக்கள் மிகவும் திண்டாட்டத்தில் இருந்தனர். இந்த நிலையில், 5 மாதங்களுக்குப் பிறகு நேற்றும் இன்றும் பெங்களூரில் நல்ல மழை பெய்துள்ளது.

கடைசியாக நவம்பர் 23 அன்று பெங்களூருவில் மழை பதிவானது. அதன் பின்னர் அந்நகரம் வறண்ட வானிலையைதான் கண்டு வந்தது. குறிப்பாக பனசங்கரி, விஜயநகர், அல்சூர், இந்திராநகர் மற்றும் பிரேசர் டவுன் போன்ற பகுதிகளில் நேற்று நல்ல மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் குளிர்ச்சியான தட்பவெட்ப நிலை நிலவி வருவதாகவும் தெரிகிறது.

நேற்று இரவு பெங்களூரில் 4.3 மில்லி மீட்டர் மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் பல பகுதிகளில் நல்ல மழை பெயதது. அதோடு வரும் நாட்களிலும் மழை தொடரும் என்று கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக 38 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.

வியாழக்கிழமை (நேற்று) 38.2 டிகிரி செல்சியஸை எட்டியது. பெங்களூரில் அடுத்த நான்கு நாட்களில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது பெங்களூர் பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்கள். | பார்க்க > பெங்களூருவை குளிர்வித்த கோடை மழை! - புகைப்படத் தொகுப்பு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE