புதிய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பகுஜன் சமாஜ்

By செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தலுக்காக 6 வேட்பாளர்கள் கொண்ட மற்றொரு பட்டியலை பகுஜன் சமாஜ் கட்சி நேற்று வெளியிட்டது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 80 தொகுதிகளை கொண்ட உ.பி.யில் இத்தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இத்தேர்தலில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. வேட்பாளர்களை அக்கட்சி அவ்வப்போது அறிவித்து வருகிறது.

இந்நிலையில் 6 வேட்பாளர்கள் கொண்ட மற்றொரு பட்டியலை பகுஜன் சமாஜ் கட்சி நேற்று வெளியிட்டது. இதன்படி கோண்டா, டோமரியாகஞ்ச், கைசர்கஞ்ச் ஆகிய தொகுதிகளில் முறையே சவுரப் குமார் மிஸ்ரா, நதீம் மிர்சா, நரேந்திர பாண்டே ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் சந்த் கபீர் நகர், பாரபங்கி, ஆசம்கர் ஆகிய தொகுதிகளில் முறையே நதீம் அஷ்ரப், ஷிவ் குமார் டோஹ்ரே, மெஷூத் அகமது ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பாஜக எம்எல்ஏ அசுதோஷ் மறைவால் இடைத்தேர்தலை சந்திக்கும் லக்னோ கிழக்கு தொகுதியில் அலோக் குஷ்வாகா போட்டியிடுகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

இந்தியா

5 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

மேலும்