புதுடெல்லி: “400 இடங்களைப் பெறுவோம்’ என்பது ஜோக் ஆகிவிட்டது. ‘300 பெறுவோம்’ என்பது பாஜகவுக்கு சாத்தியமில்லை. 200 கூட பாஜகவுக்கு சவால்தான்” என காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், “பாஜக-என்டிஏ கூட்டணி பெரும்பான்மையை இழக்கும் வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. இது முன்கூட்டியே முடிவாகிவிட்டது. இவை எங்களுக்கு சாதகமாக அமையும். ‘400 இடங்களைப் பெறுவோம்’ என்பது ஜோக் ஆகிவிட்டது.
‘300 பெறுவோம்' என்பது பாஜகவுக்கு சாத்தியமில்லை. 200 கூட பாஜகவுக்கு சவால்தான். பெரும்பான்மை இழப்பதுதான் அக்கட்சியின் தேர்தல் முடிவாக இருக்கும். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகையில் 80% பேர் வருமானத்தில் சரிவைக் கண்டுள்ளனர் என்று அனைத்துப் பொருளாதார நிபுணர்களும் கூறுகின்றனர்.
இந்நிலையில், அந்த 80% பேர் தங்களை அந்த இக்கட்டான நிலைக்குத் தள்ளிய பாஜகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? நான் போட்டியிடும் தொகுதியில் அதிகளவிலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்” என்றார் சசி தரூர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
20 mins ago
இந்தியா
40 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago