சந்திரசேகர ராவுக்கு 48 மணி நேரம் தடை

By செய்திப்பிரிவு

தெலங்கானாவில் வரும் 13-ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் பிஆர்எஸ் கட்சித் தலைவருமான சந்திரசேகர ராவ், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி சிர்சில்லாவில் பேசுகையில் காங்கிரஸ் கட்சி குறித்து ஆட்சேபத்துக்குரிய கருத்துகளை தெரிவித்தார் என்று தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் நிரஞ்சன் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதியை மீறி செயல்பட்டதாகக் கூறி சந்திரசேகர ராவ் 48 நேரத்துக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதித்தது. நேற்று இரவு 8 மணி முதல் இந்தத் தடை நடைமுறைக்கு வந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE