மும்பை: மும்பை விமான நிலையத்தில் ஒரு பானி பூரி ரூ.333-க்கு விற்பனை செய்யப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலுள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் பானி பூரி விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. இதன் விலை ரூ.333 என அதில் எழுதி வைக்கப்பட்டிருந்தது.
இதைப் பார்த்த சில பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். வாயில் நீர் ஊற வைக்கும் மிகவும் சுவையான இந்த பானி பூரியின் விலை, மும்பையில் ரூ.25 முதல் ரூ.50 வரை மட்டுமே. இந்நிலையில் இது விமான நிலையத்தில் ரூ.333-க்கு விற்கப்படுவது சரியல்ல என்று பயணி ஒருவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இந்த விலையைப் பார்த்ததுமே பசி பறந்துபோய் விடும் என்றும் அவர் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
மேலும் பானி பூரி, தஹி பூரி, சேவ் பூரி படங்களுடன் அந்த விலைப்பட்டியல் இருக்கும் புகைப்படத்தையும் எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த எக்ஸ் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதனிடையே இந்தப் பதிவுக்கு எக்ஸ் தளத்தில் கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் ஒருவர் கூறும்போது, “விமான நிலையத்தில் அது விற்பனை செய்யப்படுவதால் அதன் விலை அதிகரித்துள்ளது. விமான நிலையக் கட்டணம், பராமரிப்புக் கட்டணம், செயல்பாட்டு கட்டணம், பயன்பாட்டுக் கட்டணம், ஊதியம் உள்ளிட்ட பல விவகாரங்கள் அதில் சேர்கின்றன. அதனால்தான் வெளியில் ரூ.33-க்கு கிடைக்கும் பானி பூரி இறுதியில் விமான நிலையத்தில் ரூ.333-க்குக் கிடைக்கிறது” என்றார்.
மற்றொரு பயனர் ஒருவர் கூறும்போது, “இது நிச்சயம் பகல் கொள்ளை என்று தெரிவித்துள்ளார். பெரும்பாலான பயனர்கள் இதை பகல் கொள்ளை என்றே தெரிவித்துள்ளனர்.
மற்றொரு பயனர் கூறும்போது, “உணவகத்தை நடத்துபவர்களுக்கு நேரடியாக விமான நிலைய நிர்வாகத்தார் வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ இடங்களை கொடுப்பதில்லை. இதற்காக சில நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளன. அந்த நிறுவனங்கள் மூலமாக உணவகங்கள் விமான நிலையத்தில் வாடகைக்கு இடத்தைப் பிடிக்கின்றன.
ஒருவேளை, உணவகங்களுக்கு விமான நிலைய நிர்வாகம் நேரடியாக இடத்தை வாடகைக்குக் கொடுத்தால் உணவுகளின் விலை குறைய வாய்ப்புள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
7 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago